போக்குவரத்து ஊழியர்களுக்கு பெரும் ஊதிய உயர்வு: ஜெவின் அதிரடி அறிவிப்பு
சென்னை:
தமிழகத்தில் போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு பெரும் ஊதிய உயர்வை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அரசின் 7 போக்குவரத்துக் கழகங்களின் ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகளும் ஜெயலலிதாவும் நடத்திய பேச்சுவார்த்தைகளின்இறுதியில் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.இதன்படி சராசரியாக ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ. 825 ஊதிய உயர்வு கிடைக்கும்.
மேலும் இந்த ஊதிய உயர்வை பின் தேதியிட்டு 2003ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதியில் இருந்தே அமலாக்கவும் ஜெயலலிதாமுன் வந்துள்ளார். இதன்மூலம் டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு பெருமளவில் அரியர்ஸ் நிதிகிடைக்கும்.
இந்த ஊதிய உயர்வால் வருடத்துக்கு ரூ. 300 கோடி அரசுக்கு கூடுதல் செலவாகும்.
சட்டமன்றத் தேர்தலையொட்டி எல்லா தரப்பினருக்கும் சலுகைகளை அள்ளித் தந்து வருகிறார் ஜெயலலிதா.போக்குவரத்துத்துறை ஊழியர்கள் கடந்த 2001ம் ஆண்டு முதலே ஊதிய உயர்வு கோரி வருகின்றனர்.
இத்தனை கால இழுத்தடிப்புக்குப் பின் அவர்களது கோரிக்கையை ஜெயலலிதா இப்போது ஏற்றுள்ளது தேர்தலை மனதில்வைத்தே என்று கருதப்படுகிறது.
நாளை ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் போக்குவரத்து அமைச்சர் விஸ்வநாதனும் போக்குவரத்து ஊழியர் சங்க நிர்வாகிகளும்கையெழுத்திடுவர் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இந்த ஊதிய உயர்வை எல்லா சங்கங்களும் முழு மனதுடன் வரவேற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications