அமெரிக்காவை தாக்கியது பயங்கர சூறாவளி: மிசிசிப்பியில் 50 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்:

அமெரிக்காவின் லூசியானா, மிசிசிப்பி, அலபமா மாகாணங்களை பயங்கர சூறாவளித் தாக்கியது. இதில் மிசிசிப்பியில் மட்டும்50 பேர் பலியாகியுள்ளனர். இந்த மூன்று மாகாணங்களிலும் சேர்த்து மொத்தம் 55 பேர் பலியாகிவுட்டனர்.

மிசிசிப்பியில் ஹாரிசன் கெளன்டி பகுதியில் மட்டும் 50 பேர் பலியாகியுள்ளனர். இங்கு பயங்கர சூறாவளிக்கு ஒரு அடுக்குமாடிக் கட்டடம் உடைந்து விழுந்தது. இதில் தான் பெரும்பான்மையான உயிர்ச் சேதம் ஏற்பட்டது. மேலும் சிலர் மரங்கள்உடைந்து விழுந்ததில் உடல் சிதைந்து பலியாயினர்.

ஹரிக்கேன் காத்ரினா என்ற இந்தச் சூறாவளி கடலில் உருவாகி கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பலம் பெற்றுஅமெரிக்கா பக்கமாக நகர்ந்தது. முதலில் நியூ ஓர்லியன்ஸ் பகுதியை இது தாக்கியது.

இங்கு மணிக்கு 230 கி.மீ. வேகத்தில் பயங்கர புயல் காற்று வீசியது. முன்னெச்சரிக்கையாக இப் பகுதியில் இருந்து சுமார் 10லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுவிட்டதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

ஆனால், சூறாவளியோடு கன மழையும் இடை விடாது பெய்ததால் பல இடங்களில் வெள்ளம் புகுந்தது. இரண்டு மாடிகள் வரைபல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மரங்கள் உடைந்து விழுந்தன. வாகனங்கள், வீடுகள் ஆகியவை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன.

இந் நிலையில் இன்று மிசிசிப்பியை இந்தச் சூறாவளி தாக்கியது. இந்த நூற்றாண்டில் அமெரிக்க வளைகுடாப் பகுதியைத்தாக்கிய மிகப் பெரிய சூறாவளி இது தான் என்று கருதப்படுகிறது.

இந்தச் சூறாவளி கடந்த பகுதிகள் எல்லாமே பல மீட்டர் அளவுக்கு வெள்ளத்தில் மூழ்கிப் போயுள்ளன. அந்த அளவுக்கு கனமழையையும், புயல் காற்றையும் ஹரிக்கேன் கேத்தரினா கொட்டிச் சென்றுள்ளது.

கடலோரப் பகுதிகள் தான் இதில் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. கடும் காற்று காரணமாக அலைகள் பல மீட்டர் உயரம்எழும்பி கரைகளைக் கடந்து சாலைகளில் கடல் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இப்போது பலமிழந்துவிட்ட இந்த சூறாவளி மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் புயல் காற்றை வீசியபடி டென்னசி, ஓகியோ ரிவர்வேலி பகுதிகளைக் கடந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மிகப் பெரும் அளவில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. தீயணைப்புப் படையினர், போலீசார்,ராணுவத்தினர், விமானப் படையினர் தவிர கடற்படையினரும் இந்த மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+