வக்கீல் கட்டணம் ரூ. 1 லட்சத்தை திருப்பித் தந்த நளினி சிதம்பரம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

வருமான வரித்துறை வழக்கில் ஆஜரானதற்காக தரப்பட்ட ரூ. 1லட்சம் கட்டணத்தை வருமான வரித்துறைதலைமை ஆணையரிடமே திருப்பி வழங்கியுள்ளார் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம்.

வரி ஏய்ப்பு தொடர்பாக 50 ஜவுளி ஆலைகளுக்கு எதிரான வழக்குகளில், சென்னை வருமான வரித்துறைசார்பாக ப.சிதம்பரத்தின் மனைவி நளினி ஆஜராகி வாதாடினார். இதில் வருமான வரித்துறைக்கு பாதகமாகவேதீர்ப்பு வெளியானது.

இதைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினையை அதிமுக நாடாளுமன்றத்தில் எழுப்பியது.

ரூ. 2 கோடி வரை கட்டணமாக வாங்கி விட்டு, வருமான வரித்துறைக்கு மிகப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டார் நளினி சிதம்பரம். வருமான வரித்துறை வக்கீலாக அவர் நியமிக்கப்பட்டது அதிகார துஷ்பிரயோகம்,சட்டவிரோதமானது என்று அதிமுக புகார் கூறியுள்ளது.

இந்தப் பிரச்சினை கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தை உலுக்கியது. அதிகார துஷ்பிரயோகம் செய்தசிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜகவும் அதிமுகவும் கோரி வருகின்றன.

ஆனன், வருமான வரித்துறை வழக்கறிஞராக நளினி நியமிக்கப்பட்டது குறித்து தனக்கு எதுவும் தெரியாதுஎன்றும், முன்பே தெரிந்திருந்தால் அதைத் தடுத்திருப்பேன் என்றும் சிதம்பரம் தொடர்ந்து விளக்கம் அளித்துவருகிறார்.

ஆனால் அவரது விளக்கத்தை ஏற்க பாஜக உள்ளிட்ட கட்சிகள் மறுத்து வருகின்றன.

இந் நிலையில் இந்த சர்ச்சையில் ஒரு திருப்பமாக, வழக்குகளில் வாதாடுவதற்காக தான் பெற்ற கட்டணமான ரூ.1லட்சத்தை வருமான வரித்துறையிடமே திருப்பிக் கொடுத்துள்ளா நளினி.

அவர் கூறுகையில், நான் ரூ. 2 கோடி கட்டணமாக பெற்றதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது. வருமானவரித்துறை சார்பாக நடந்த 50 வழக்குகளில் ஆஜராக நான் ரூ. 1லட்சம் மட்டுமே கட்டணமாக பெற்றேன். 6நாட்கள் நான் வாதாடியுள்ளேன்.

இந்தப் பணத்தை வருமான வரித்துறை எனக்கு காசோலை மூலம் தந்தது. தற்போது அந்தப் பணத்தை நான்காசோலை மூலமாகவே, வருமான வரித்துறை தலைமை ஆணையருக்கு திருப்பி அனுப்பி விட்டேன்.

இந்த வழக்கில் நாங்கள் திறமையாக வாதாடியும், தோல்வியுற்றது வருத்தம் தருகிறது. எனது வாதத்தில் 20பாராக்களை நீதிபதி பதிவு செய்து கொண்டுள்ளார் என்பதை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.

இருப்பினும் தொழில்நுட்பரீதியாகவும், போதுமான ஆவணங்கள் இல்லாததாலும் இந்த வழக்கில் தோற்றோம்.

உச்சநீதிமன்றத்தில் நிச்சயம் இந்த வழக்கு வெற்றி பெறும் என்று நம்புகிறேன். வருமான வரித்துறை சிறப்புவழக்கறிஞராக நான் கடந்த 20 வருடங்களாக ஆஜராகி வருகிறேன். இதுபோன்ற சர்ச்சையில் முதல் முறையாகசிக்கியுள்ளது எனக்கு மிகவும் மன வருத்தத்தை அளித்துள்ளது.

விதிமுறைகளை மீற வேண்டும் என்று நான் நினைத்தது கூட கிடையாது. தொழில் தர்மத்தையும்,கண்ணியத்தையும் நான் கடைப்பிடித்து வருகிறேன். இந்தப் பிரச்சினை எனக்கு பெரும் சோர்வைக்கொடுத்துள்ளது என்றார் நளினி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+