கோலாலம்பூர்-லண்டன் விமானத்தில் பெண்ணுக்கு பிரசவ வலி: சென்னையில் குழந்தை பிறந்தது
சென்னை:
மலேசிய விமானத்தில் பயணம் செய்த பெண்ணுக்கு நடுவானில் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து விமானம் சென்னையில்தரையிறக்கப்பட்டு, அப் பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது.
மலேசியாவைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி கலைவாணி. நிறைமாத கர்ப்பிணியான கலைவாணி, தனதுகணவருடன் கோலாலம்பூரில் இருந்து லண்டனுக்குப் பயணமானார்.அவர் பயணம் செய்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னைக்கு அருகே இந்தியப் பெருங்கடலுக்கு மேலே பறந்துகொண்டிருந்தபோது, கலைவாணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து விமானி சென்னையில் விமானத்தை தரையிறக்க அனுமதி கோரினார்.
மனிதாபிமான அடிப்படையில் விமானம் தரையிறங்க அதிகாரிகள் உடனடியாக அனுமதி கொடுத்தனர். மேலும் ஆம்புலன்சும்,மருத்துவக் குழுவினரும் தயார் செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து மலேசிய விமானம் சென்னையில் தரையிறங்கியது.
விமான நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவர் குழுவினர் கலைவாணியை விமானத்திலிருந்து வெளியே கொண்டு வந்துஆம்புலன்ஸில் ஏற்றி தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது.
கலைவாணி மற்றும் அவரது கணவரை சென்னை விமான நிலையத்தில் இறக்கி விட்ட பின்னர் மலேசிய விமானம் லண்டன்புறப்பட்டுச் சென்றது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications