ஆசிரியர் தினம்: பர்னாலா, ஜெ. வாழ்த்து
சென்னை:
ஆசிரியர் தினத்தையொட்டி ஆளுநர் பர்னாலா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் தினம் நாடு முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமே, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.இதையொட்டி ஆளுநர் பர்னாலா விடுத்துள்ள அறிக்கையில், சமுதாய வளர்ச்சிக்கும், இளைய சமுதாயத்தினரை சிறந்தகுடிமக்களாக உருவாக்குவதிலும் ஆசிரியர்களின் பணி மகத்தானது. அறிவு வளர்ச்சிக்கு கல்வியே சிறந்த ஆதாரமாக திகழ்கிறது.
சிறந்த குடிமக்களாக மாணவர்களை மாற்றும் அரிய பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்றுகூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள செய்தியில், கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதே தமிழக மக்களின்ஆண்டாண்டு கால சிந்தனை. அவ்வாறு சென்ற இடமெல்லாம் சிறப்பளிக்கும் கல்வியை, எந்தவிதத்திலாவது பெற வேண்டும்என்பது நம் நாட்டின் புலவர் பெருமக்களின் அறிவுரையாக இருந்து வருகிறது.
கல்லாதவர்களே தமிழகத்தில் இருக்கக் கூடாது என்பதே எனது கோட்பாடகாவும், அதிமுக அரசின் குறிக்கோளாகவும்அமைந்துள்ளது. பயிற்றுப் பல கல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திட வேண்டும் என்ற பாரதியின் கனவை நனவாக்கி வருகிறதுஎனது அரசு.
தத்துவஞானி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமாகிய செப்டம்பர் 5ம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடும் இந்தநேரத்தில், சிறக்கட்டம் ஆசிரியப் பெருமக்கள் வாழ்வு, செழிக்கட்டும் தமிழகக் கல்வி என்று வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications