விஜயகாந்த் ரசிகர்கள், வி.சிறுத்தைகள் மோதல்: சென்னையில் பதட்டம்!
சென்னை:
விஜயகாந்த் ரசிகர்களுக்கும், விடுதலைச் சிறுத்தைகள் தொண்டர்களுக்கும் இடையே சென்னையில் இன்று பெரும் மோதல்ஏற்பட்டது, விஜயகாந்த் கொடும்பாவியை எரிக்கப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு அறிவித்துள்ளதால் நகரில்பதட்டம் ஏற்பட்டுள்ளது.
தங்கர்பச்சான் விவகாரத்தில் விஜயகாந்த் கட்டப் பஞ்சாயத்து செய்துள்ளார். எனவே அவரையும் குஷ்பு, ஸ்ரீபிரியாஆகியோரையும் கைது செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல் திருமாவளவன் சமீபத்தில்கூறியிருந்தார்.இதைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் மீது விஜயகாந்த் ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர். இந்த நிலையில்,சென்னை மயிலாப்பூர் பகுதியில் அம்பேத்கர் பாலம் அருகே திங்கள்கிழமை விஜயகாந்த் ரசிகர்களும், விடுதலைச் சிறுத்தைதொண்டர்களுக்கும் இடையே பெரும் மோதல் மூண்டது.
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பேனரை கிழிக்க ரசிகர்கள் முயன்றனர். இதையடுத்து விடுதலைச் சிறுத்தை தொண்டர்கள்அவர்களைத் தடுத்தனர். விஜயகாந்த் மன்றத்தினர் வைத்திருந்த பேனர்களை அவர்கள் கிழித்தனர். இதையடுத்து இரு தரப்பினரும்கடுமையாக மோதிக் கொண்டனர். இதில் சில ரசிகர்கள் காயமடைந்தனர்.
விஜயகாந்த் ரசிகர்கள் தாக்குதல் நடத்தியதற்கு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. விஜயகாந்த்தைகைது செய்யக் கோரி இன்று மாலை சென்னை மெமோரியல் ஹால் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தவும், விஜயகாந்த்தின்கொடும்பாவியை எரிக்கப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளதால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோல திண்டிவனத்திலும் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. காவல் நிலையம் அருகே விஜயகாந்த்ரசிகர்கள் விளம்பர பேனரை வைத்தனர். இதை விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சர்ந்த அமைப்பாளர் திலீபன் எதிர்த்தார்.இதுதொடர்பாக விஜயகாந்த் ரசிகர் மன்றத் தலைவர் புஷ்பராஜுக்கு சொந்தமான கடையை விடுதலைச் சிறுத்தைகள்தொண்டர்கள் அடித்து நொறுக்கினர்.
இதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் செய்யச் சென்றனர். அப்போது காவல் நிலைய வாசலில் மீண்டும்சண்டை மூண்டது. அப்போது விடுதலைச் சிறுத்தைகள் நகர துணைத் தலைவர் ரங்கராஜுக்கு, கத்திக் குத்து விழுந்தது. இதில்அவர் காயமடைந்தார். இதுதொடர்பாக ரசிகர் மன்ற செயலாளர் ராஜா கைது செய்யப்பட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications