புலி ஆதரவு பேச்சு: பாமக எம்.எல்.ஏ. கைது
மதுரை:
காரைக்குடியில் நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியது தொடர்பான வழக்கில் வந்தவாசி பாமகஎம்.எல்.ஏ. முருகவேல்ராஜன் மதுரையில் கைது செய்யப்பட்டார்.
மதுரை விளாங்குடியைச் சேர்ந்தவர் முருகேவல்ராஜன். தேவேந்திர குல இளைஞர் பேரவை என்ற தலித் அமைப்பை நடத்திவருகிறார். கடந்த சட்டசபைத் தேர்தலில் வந்தவாசி தனித் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.பாமகவில் தலித்துகளுக்கு மரியாதை இல்லை என்று கூறி பாமகவுடன் சேராமல் தனித்து இயங்கி வருகிறார் முருகவேல்ராஜன்.
கடந்த 1995ம் ஆண்டு காரைக்குடியில் நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகமுருகவேல்ராஜன் மீது காரைக்குடி வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இருப்பினும் முருகவேல்ராஜன் கைதுசெய்யப்படாமல் இருந்து வந்தார். அவரைக் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தும் கூட கடந்த 10 வருடமாக அவர்கைது செய்யப்படாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் தமிழகத்தில் பிடிவாரண்ட் நிலுவையில் உள்ளவர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க தேர்தல் ஆணையம்உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நிலுவையில் உள்ள பிடிவாரண்ட் வழக்குகளை விரைந்து முடிக்குமாறு மாநில டிஜிபிஅலெக்சாண்டர் உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில், முருகவேல்ராஜனை கைது செய்ய காரைக்குடி போலீஸார் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்துவிளாங்குடியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற காரைக்குடி போலீஸார் முருகவேல்ராஜனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட முருகவேல்ராஜன் தேவகோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications