மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது!
Subscribe to Oneindia Tamil
சேலம்:
மேட்டூர் அணை இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக நிரம்பியுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவை எட்டாமல் இருந்தது. போதிய மழை இல்லாமலும்,கர்ாநடகம் காவிரியில் தண்ணீர் திறந்து விடாமலும் இருந்ததால் அணை நிரம்புவது இயலாத காரியமாக இருந்தது.இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கர்நாடக பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதிமேட்டூர் அணை முதல் முறையாக தனது முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது.
இதைத் தொடர்ந்து நீர் வரத்து குறைந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கர்நாடக காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில்நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் இன்று மீண்டும் மேட்டூர் அணை நிரம்பியது.
அணைக்கு விநாடிக்கு 37,000 கன அடி நீர் தற்போது வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 18,700 கன அடி நீர்திறந்து விடப்படுகிறது.
மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியுள்ளதால் காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications