வீரப்பனுக்கு திடீர் அஞ்சலி! தர்மபுரியில் பரபரப்பு!
தர்மபுரி:
சந்தனக் கடத்தல் வீரப்பன் படத்திற்கு வன்னியர் சங்கம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் மலர் அஞ்சலி செலுத்தியதால் தர்மபுரிமாவட்டம் பாளையபுரம் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தமிழக, கர்நாடக காவல்துறையினருக்கு பெரும் சிம்ம சொப்பனமாக விளங்கி வந்தவன் வீரப்பன்.எத்தனையோ வியூகங்கள் அமைத்தும் கூட வீரப்பனை யாராலும் பிடிக்க முடியவில்லை. அவனைப் பிடிக்கவே முடியாது என்று உறுதியாகமக்கள் கூறி வந்தனர்.இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதி தமிழக அதிரடிப்படை கூடுதல் டிஜிபி விஜயக்குமார் தலைமையிலான அதிரடிப்படைதர்மபுரி மாவட்டம் பாடி வனப்பகுதியில் வைத்து வீரப்பனை வீழ்த்தியது.
வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு அடுத்த மாதத்துடன் ஒரு ஆண்டு முடிகிறது. இந்த நிலையில், தர்மபுரி மாவட்டம் பாளையபுரம் என்றகிராமத்தில் ஏராளமான இளைஞர்கள் வீரப்பனின் உருவப் படத்திற்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்தினர்.
அந்த இளைஞர்கள் தாங்கள் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்டனர். வீரப்பன் படத்திற்கு அருகே சங்கத்தின் கொடிபறக்க விடப்பட்டிருந்தது ஜருகு, அசிப்பட்டி, கொங்கலாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் இங்கு வந்து மாலைபோட்டு வீரப்பன் படத்திற்கு அஞ்சலி செலுத்தியதாக போலீஸார் குறிப்பிட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலைப் பகுதி கிராமங்களில் போலீஸார் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டிருந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications