விஜயகாந்த் கட்சியில் இணைந்தார் பண்ருட்டி ராமச்சந்திரன்
சென்னை:
![]() |
விஜயகாந்த்தின் அரசியல் ஆலோசகர் என்று வர்ணிக்கப்பட்டு வந்த முன்னாள் அதிமுக அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் விஜயகாந்த்முன்னிலையில் அவரது தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியில் இணைந்தார்.
எம்.ஜி.ஆரின். செல்லப் பிள்ளைகளில் ஒருவராக விளங்கியவர் பண்ருட்டி ராமச்சந்திரன். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த பண்ருட்டிராமச்சந்திரன், எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். பண்ருட்டி தொகுதியிலிருந்து பல முறைசட்டசபைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு ஜானகி அணி, ஜெயலலிதா அணி என அதிமுக பிளவுபட்டபோது, பண்ருட்டி, ஜெயலலிதா அணியில்சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து பண்ருட்டி, நெடுஞ்செழியன், அரங்கநாயகம், திருநாவுக்கரசு ஆகியோர் வெளியேறி புதிய அணியைஉருவாக்கினர். இதற்கு நால்வர் அணி என்று அப்போது பெயர் கிடைத்தது.
ஆனால் அந்த அணி நீண்ட நாள் நிலைக்கவில்லை. ஆளுக்கொரு பக்கமாக நான்கு பேரும் போய் விட்டனர். நெடுஞ்செழியன்,அரங்கநாயகம் இருவரும் ஜெயலலிதாவிடமே சென்றனர். திருநாவுக்கரசு தனிக் கட்சி ஆரம்பித்தார். பண்ருட்டி ராமச்சந்திரன் பாமகவில்இணைந்தார்.
பாமகவில் சேர்ந்து பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பாமகவின் முதல் எம்.எல்.ஏ. என்ற பெருமையையும் பெற்றார். 2வருடங்களுக்குப் பிறகு அதிலிருந்து விலகினார். தனியாக ஒரு அமைப்பை நடத்தினார். அதுவும் சரிப்பட்டு வராமல், அவரும்எஸ்.டி.சோமசுந்தரம், ராஜாராம் ஆகியோர் இணைந்து புதிய கட்சி தொடங்கினார்கள். அதன் பிறகு தீவிர அரசியலிலிருந்து விலகியிருந்தார்பண்ருட்டி.
இந்த நிலையில் விஜயகாந்த்துக்கு அரசியல் ஆலோசனைகளை பண்ருட்டியார் வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகின.விஜயகாந்த்த்தின் மதுரை மாநாட்டில் வெளியிடப்பட்ட மலருக்கு, முன்னுரை எழுதித் தந்தார் பண்ருட்டி. அத்தோடு, தனது அரசியல்அனுபவங்களையும் விஜயகாந்த்திடம் கூறினார். இருப்பினும் தான் விஜயகாந்த்துக்கு ஆலோசகராக செயல்படவில்லை என்று பண்ருட்டிதெரிவித்திருந்தார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் விஜயகாந்த்தை சந்தித்து கட்சியில் சேர்ந்துள்ளார் பண்ருட்டியார். விஜயகாந்த்துக்கு தான் ஆலோசகராகசெயல்படவில்லை என்று கூறிய நிலையில் திடீரென அவரை சந்தித்து கட்சியில் இணைந்துள்ளதன் மூலம் பண்ருட்டி ராமச்சந்திரன்அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்துவார் என தெரிகிறது.மேலும், வட மாவட்டங்களில் கணிசமாக உள்ள வன்னியர் சமுதாயத்தினர் மத்தியில் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு ஓரளவு நல்ல பெயர்உள்ளது. எனவே, பாமக மீதான தாக்குதலுக்கு பண்ருட்டியாரை விஜயகாந்த் முன்னிலைப்படுத்தக் கூடும் என்று தெரிகிறது. மேலும்,வன்னியர்கள் தனக்கு எதிரி இல்லை என்பதை அவர்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் பண்ருட்டியாருக்கு தனது கட்சியில் முக்கியப்பொறுப்பையும் விஜயகாந்த் அளிக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தது முதல் இதுவரை பிற அரசியல் கட்சியைச் சேர்ந்த இரண்டு பேர் அவரது கட்சியில் இணைந்துள்ளனர்.அவர்களில் முதலில் இணைந்தவர் முன்னாள் அரசு கொறடா ஜெயக்குமார், தற்போது பண்ருட்டியார் இணைந்துள்ளார். இருவருமேஅதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
பண்ருட்டியாரைத் தொடர்ந்து மேலும் பல முக்கியப் புள்ளிகள் விஜயகாந்த் கட்சியில் இணையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications