நான் விஜயகாந்த்தின் ஆலோசகர் அல்ல: பண்ருட்டி ராமச்சந்திரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் விஜயகாந்த்தின் அரசியல் ஆலோசகராக நான் செயல்படவில்லை என்று முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன்கூறியுள்ளார்.

ஜூனியர் விகடன் வார இதழுக்கு அளித்துள்ள ஒரு பேட்டியில் ராமச்சந்திரன் இவ்வாறு கூறியுள்ளார். எம்.ஜி.ஆருக்குநெருக்கமானவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். அவரது அமைச்சரவையில் தொடர்ந்து அமைச்சராகஇருந்தவர்.

எம்.ஜி.ஆருக்குப் பின்னர் சிறிது காலம் அதிமுகவில் இருந்தவர் பின்னர் அதிலிருந்து விலகி தனி அமைப்பு ஒன்றை நடத்திவந்தார். தற்போது தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியுள்ளார். இந்த நிலையில், விஜயகாந்த்தின் பின்னணியில் பண்ருட்டிராமச்சந்திரன் இருப்பதாக செய்திகள் பரவியுள்ளன.

இதுகுறித்து ராமச்சந்திரன் அளித்துள்ள பேட்டி: நீண்ட நாட்களுக்குப் பிறகு எம்.ஜி.ஆரைப் போலவே ஏழை, மக்களுக்காகசிந்திக்கும் ஒரு தலைவர் உருவாகியுள்ளார். இது என்னைப் போல லட்சக்கணக்காக உள்ள எம்.ஜி.ஆர். ரசிகர்களைசந்தோஷப்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆருக்குப் பிறகு விஜயகாந்த்தை மக்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது.

எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அதிமுகவை, எம்.ஜி.ஆரை சுத்தமாக மறைத்து விட்டு நடத்திக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.ஓட்டு கேட்க செல்லும்போது மட்டுமே எம்.ஜி.ஆர். பெயரை பயன்படுத்துகிறார். இதனால் உண்மையான எம்.ஜி.ஆர்தொண்டர்கள் வெறுத்துப் போயுள்ளோம்.

எனவே அப்படிப்பட்ட எம்.ஜி.ஆர். தொண்டர்கள் விஜயகாந்த்துக்குப் பின்னால் அணிவகுப்பது ஆச்சரியமான விஷயம்இல்லை. விஜயகாந்த்தின் அணுகுமுறை எனக்கும் பிடித்திருக்கிறது. அதற்காக நான் அவரின் அரசியல் ஆலோசகர் என்று கூறிவிட முடியாது. காரணம், விஜயகாந்த்திற்கே தமிழக அரசியல் நிலவரம் குறித்து நன்றாகத் தெரியும்.

அரசியல் இயக்கம் ஆரம்பிப்பதற்கு முன்பாக அவரது மன்ற நிர்வாகிகள் என்னைப் பார்க்க வந்தனர். விஜயகாந்த் குறித்த புத்தகம்போடப் போகிறோம். அதற்கு உங்களது முன்னுரை தேவை என்று கேட்டார்கள். நானும் வெகுவாகப் புகழ்ந்து எழுதிக்கொடுத்தேன். பின்னர், அரசியலில் விஜயகாந்த் எப்படி செயல்பட வேண்டும் என்று கேட்டார்கள். நானும் எனது அனுபவத்தைவைத்துக் கூறினேன்.

அதை அப்படியே அவர்கள் விஜயகாந்த்திடம் சொல்லியுள்ளனர். அதைக் கேட்ட அவர் ரொம்பவும் சந்தோஷப்பட்டாராம்.இதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. நான் இதுவரை விஜயகாந்த்தை நேரில் சந்தித்தது கூட இல்லை.

விஜயகாந்த் பற்றி அறிந்தவரை சொல்கிறேன். அவர் எடுத்த முடிவிலிருந்து பின் வாங்க மாட்டார். நிச்சயம் வெற்றி பெறுவார்.கடைசி வரையில் அவர் தனித்து நின்று செயல்பட்டாலே அவருக்கு வெற்றி தேடி வரும்.

தனித்து ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு அவரால் முடியுமா என்பதை சொல்ல முடியாது. இருந்தாலும் அவரால் தமிழகஅரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

எம்.ஜி.ஆருக்கு இன்னும் தமிழகத்தில் பெரும் செல்வாக்கு இருக்கிறது. ஆனால் அவரது பெயரைக் கொண்ட கட்சியை வைத்துக்கொண்டு, அவரது பெயரை இருட்டடிப்பு செய்து கட்சி நடத்தி வருகிறார் ஜெயலலிதா. அவர் மீது உண்மையான எம்.ஜி.ஆர்.பக்தர்கள் கோபத்துடன் உள்ளனர். எனவே அவர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டு, எம்.ஜி.ஆர். பெயரைச் சொல்லி நிச்சயம்வெற்றி பெறுவார் விஜயகாந்த். ஜெயலலிதாவுக்கு சரியான பாடம் புகட்டுவார் விஜயகாந்த் என்று கூறியுள்ளார் பண்ருட்டிராமச்சந்திரன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+