ரயில்கள், தபால் நிலையங்கள், சிறையை தகர்ப்போம்: அல்-உம்மா மிரட்டல்
திருநெல்வேலி:
பாளையங்கோட்டை மத்திய சிறையை வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வேன் மூலம் மோதித் தகர்ப்போம் என அல்-உம்மாமிரட்டல் விடுத்துள்ளது. இதையடுத்து அங்கு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தென்காசி ரயில் நிலைய மேலாளர் ராமகிருஷ்ணனுக்கு இது தொடர்பாக ஒரு கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதத்தைகேரளாவைச் சேர்ந்த அல்-உம்மா அமைப்பினர் எழுதியுள்ளனர். அதில் அவர்கள் பல்வேறு மிரட்டல்களை விடுத்துள்ளனர்.கடிதம் கிடைத்த 35 நாட்களுக்குள், தென்காசி வழியாக கேரளாவுக்கு செல்லும் ரயில்களை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்போகிறோம். அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள் ஆகியவற்றை தபால் வெடிகுண்டு மூலம் தகர்ப்போம்.
மதானியின் ஆதரவாளர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் ஊடுறுவியுள்ளனர். விடிய விடிய ரயில் தண்டவாளங்களைப்பாதுகாத்தாலும் அவற்றை வெடி வைத்துத் தகர்ப்போம். இதற்காக ஆந்திராவிலிருந்து நக்சலைட்டுகள் வந்துள்ளனர்.
பாளையங்கோட்டை சிறைச் சாலையை, வெடிகுண்டு நிரப்பப்பட்ட வேன் மூலம் மோதி தகர்ப்போம். எத்தனை போலீஸார்பாதுகாப்புக்காக வந்தாலும் இதைத் தடுக்க முடியாது என்று அதில் எழுதப்பட்டிருந்தது.
இக்கடிதம் ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரண முடுக்கி விடப்பட்டுள்ளது. பாளை சிறைக்கும் பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.
இக்கடிதத்தில் கேரள அல் உம்மா என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் இக்கடிதம் திருப்பூரிலிருந்து அனுப்பப்பட்டுள்ளதாகபோலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications