கோஷ்டிப் பூசல்: காந்திஜியிடம் காங். தொண்டர்கள் வேண்டுதல்!!
சென்னை:
காங்கிரஸ் கட்சியில் நிலவும் கோஷ்டிப் பூசல் நீங்க காந்தியடிகளின் ஆசி கோரி சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன்புஇளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் விழுந்து வணங்கி வேண்டிக் கொண்டனர்.
எஸ்.ஆர்.பி. விவகாரம் தொடர்பாக வாசன் ஆதரவாளர்களுக்கும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆதரவாளர்களுக்கும் இடையேகோஷ்டிப் பூசல் உச்சத்தை அடைந்துள்ளது.இரு தரப்பினரும் மாறி மாறி அறிக்கைப் போர்களில் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில் தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த10க்கும் மேற்பட்ட தொண்டர்கள் இன்று காலை கடற்கரை மகாத்மா காந்தி சிலைக்கு சென்று அங்கு நூதன போராட்டத்தில் குதித்தனர்.
கட்சிக் கொடியை சிலை முன்பு விரித்து அதில் தங்களது உறுப்பினர் அட்டைகளைப் போட்டு காந்தி சிலை முன்பு விழுந்து வணங்கினர்.
அப்போது, கட்சியில் நிலவும் கோஷ்டிப் பூசல் விரைவில் நீங்க ஆசிர்வதிக்க வேண்டும், தலைவர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்என்று காந்தியடிகளை அவர்கள் வேண்டிக் கொண்டனர்.
பின்னர் அவர்கள் கூறுகையில், காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிப் பூசல் உச்சத்தை அடைந்திருப்பது வேதனையைத் தருகிறது. தலைவர்கள்மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் புகார் கூறுவதால் கட்சியின் பெயர் கெட்டுப் போய் விட்டது.
எனவே தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் முன்னிலையில் கட்சியின் அனைத்துத் தலைவர்களும் இன்னும் 36 மணி நேரத்தில் இங்குவந்து காந்தி சிலை முன்பு இனிமேல் கோஷ்டி மோதலில் ஈடுபட மாட்டோம் என உறுதியளிக்க வேண்டும். இல்லாவிட்டால் கட்சியை விட்டுவிலகி விடுவோம் என்றனர்.
இளைஞர் காங்கிரஸாரின் இந்த நூதனப் போராட்டத்தால் காந்தி சிலை பகுதியில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அங்கு போலீஸார்குவிக்கப்பட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications