ஓகனேக்கலில் குவிந்த கர்நாடக விவசாயிகள்: பதட்டம் அதிகரிப்பு- தமிழக போலீஸ் உஷார்
ஓகனேக்கல்:
ஓகனேக்கல் அருவி மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளுக்குள் ஏராளமான கர்நாடக விவசாயிகள் குவிந்துவருகின்றனர். இதையடுத்து தமிழக போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் மற்றும் கர்நாடகத்தின் எல்லைப் பகுதியில் உள்ள ஓகனேக்கல் அருவிப் பகுதியை தங்களுக்குச் சொந்தமானது என்று கர்நாடகம்கூறத் தொடங்கியுள்ளது. அங்கு வளர்ச்சிப் பணியில் ஈடுபட்டு வந்த தமிழக அரசு அதிகாரிகள் மீது கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்கமுயற்சித்து வருகிறது.இதுதொடர்பாக சமீபத்தில் இரு மாநில அரசுகளும் இணைந்து மேற்கொண்ட சர்வே முடிவுகளை ஏற்கவும் கர்நாடக அரசு மறுத்து விட்டது.இந் நிலையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் ஊடுறுவ கர்நாடக மாநில விவசாயிகளை அம் மாநில வனத்துறை தூண்டி விட்டுள்ளதாககூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய பகுதிகளுக்குள் நுழைய ஏராளமான கர்நாடக விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். கொள்ளேகால்தாலுகாவைச் சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் கர்நாடக பகுதியில் உள்ள ஓகனேக்கல் அருவிக் கரையில் கூடியுள்ளனர்.
அவர்களுக்கு ஆதரவாக கன்னட சாளுவாளி என்ற கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜும் அங்கு வந்துள்ளதாகக்கூறப்படுகிறது.
கர்நாடகத்தில் உள்ள மாறுகொட்டாய் என்ற இடத்திலிருந்து தமிழகத்திற்குச் சொந்தமான ஓகனேக்கல் பகுதிக்குள் ஊடுறுவி போராட்டம்நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து தமிழக ஓகனேக்கல் பகுதியில் ஏராளமான போலீஸார் துப்பாக்கி சகிதம் குவிக்கப்பட்டுள்ளனர்.
தர்மபுரி டி.எஸ்.பி. மகேந்திரன், பெண்ணாகரம் டி.எஸ்.பி. லட்சுமண சாமி தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேசமயம், கர்நாடக விவசாயிகள் மற்றும் கன்னட சாளுவளி அமைப்பினருக்கு பாதுகாப்பாக அம்மாநிலபோலீஸாரும் மறு கரையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
போலீஸ் குவிப்பு மற்றும் கர்நாடகத்தினரின் போராட்டம் காரணமாக ஓகனேக்கல் பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது. இந்தபதற்றம் காரணமாக பரிசல் போக்குவரத்து இரு பகுதிகளிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளும் அங்கு அனுமதிக்கப்படவில்லை.
இந்தப் பிரச்சனை மேலும் பெரிதாகாமல் ஆரம்பத்திலேயே தடுக்க மத்திய அரசு இதில் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையும்எழுந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications