கண்ணகி சிலையும் மீண்டு(ம்) வரும்: கருணாநிதி
சென்னை:
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பெயர் காப்பாற்றப்பட்டதைப் போலவே கண்ணகி சிலையும் மீண்டும் உரிய இடத்தில் வந்துகாட்சி தரும் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை விவரம்:சென்னைப் பல்கலைக்கழக பெயர் விவகாரத்தில் முதல் நாள் ஒரு முடிவைச் சொல்லிவிட்டு மறுநாள் பல்டி அடித்திருக்கிறது தமிழக அரசு.
திமுக ஆட்சிக் காலத்தில் இருந்தது போலவே யுனிவர்சிட்டி ஆப் மெட்ராஸ் என்று ஆங்கிலத்திலும் சென்னைப் பல்கலைக்கழகம் என்றுதமிழிலும் அப்படியே இருந்திருக்கலாம்.
ஆனால், இவர்கள் சென்னை பல்கலைக் கழகம் என்ற தமிழையே விழுங்கிவிடப் பார்த்தார்கள். நல்லவேளையாக எதிர்க் கட்சிகள்அனைவரும் ஒன்று சேர்ந்து சென்னை என்ற தமிழ்ப் பெயர் அகற்றப்படாமல் போராடி, முதலை வாய்க்குள் போனதை 24 மணி நேரத்தில்மீட்டு வெளியே கொண்டு வந்துவிட்டார்கள்.
இல்லாவிட்டால் இதே பசி வெறியுடன் பல தமிழ்ப் பெயர்களை விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டு இறுதியாக தமிழ்நாடு என்ற பெயர் மீதும்தாவி தகர்த்திட நினைத்திருப்பார்கள்.
சட்டமன்ற குறிப்பில், சென்னைப் பல்கலைக்கழகம் என்று இருப்பதை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று திட்டவட்டமாகவும்,தீர்மானமாகவும், முதல் அமைச்சராக உள்ள ஜெயலலிதா தன்னையே சபாநாயகராகவும் பாவித்துக் கொண்டு தீர்ப்பளித்தாரே, அந்த முதல்நாள் முறுக்கு ஏன் மறுநாள் நறுக்கென்று முறிந்து உடைந்து தூள் தூளானது?
எங்கள் பகைவர்
எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்
ஒன்றாதல் கண்டே...
என்ற புரட்சிக் கவிஞரின் சங்கநாதம் செவிகளில் ஒலிப்பது தான் அதற்குக் காரணம். இதனால் தான் ஜெயலலிதாவின் ஆணவம்பொடிப்பொடியானது.
இந்த தமிழர் எழுச்சி முழக்கம் தொடர்ந்தால், கடற்கரையில் கம்பீரமாக நின்ற சிலம்புடைத்த செந்தமிழ்ச் செல்வி, கற்புக் கனல், பொற்படைமங்கையாம் கண்ணகியின் சிலை- இன்று அலங்கோலமுற்று- அருங்காட்சியகத்தில் அனாதையாகக் கிடக்கிறதே, அச் சிலையும் உரியஇடத்தில் மீண்டும் வந்து காட்சி தரும் அந்த நாளையும் நம் கண்களால் காணலாம்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications