திருமணத்துக்கு முன் செக்ஸ் தப்பில்லை: குஷ்பு
இந்தியா டுடே இதழில் குஷ்பு அளித்துள்ள பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில், கல்யாணத்துக்கு முன் பெண் கன்னித் தன்மையுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து ஆண்கள் விடுபட வேண்டும்,திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகாமலும் பால்வினை நோய்கள் பரவி விடாமலும் பெண் தன்னைப்பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். குஷ்புவின் இந்தக் கருத்துக்கு பெண்கள் அமைப்புகள் கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளன.
![]() |
முன்பு, பணத்துக்காக மட்டுமே நடிப்பவர்கள் விபச்சாரிகள் என்று தங்கர்பச்சான் கூறியதாக எழுந்த விவகாரத்தில் அவர் மீது ரொம்பவேபாய்ச்சல் காட்டியது குஷ்புவும் மனோரமாவும் தான்.
இதையடுத்து பத்தினி குஷ்புவுக்கு கோவில் கட்டுவோம் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன, அவருக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள்உள்ளிட்ட அமைப்புகள் குரல் கொடுத்தன. குஷ்புவின் கடந்த காலம் குறித்த கிளறல்களையும் ஆரம்பித்து வைத்தனர்.
இந் நிலையில் தான் குஷ்பு இந்தியா டுடேவுக்கு பேட்டியளித்தார். குஷ்புவின் பேட்டியை கண்டித்து, தென்னிந்திய நடிகர் சங்கம் முன்புவிடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் சார்பில் முற்றுகைப் போராட்டமும் நடத்தப்பட்டது.
குஷ்பு, மனோரமா செல்லும் இடங்களிலெல்லாம் போராட்டம் நடத்தப்படும் எனவும் சில அமைப்புகள் எச்சரித்துள்ளன.
சமீபத்தில் மனோரமா சேலத்தில் ஒரு கோவில விழாவுக்கு சென்றபோது, நடிகைகள் ஆபாசமாகவும், கவர்ச்சியாகவும் நடிப்பதைத் தடுக்கவேண்டும் என்று கோரி ஒரு அமைப்பினர் அவரிடம் சேலைகள் கொடுக்க முயற்சித்து கைதாகினர்.
இந் நிலையில் குஷ்பு இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்தியா டுடேவுக்கு அவர் அளித்த பேட்டியின் சுருக்கம்,
பெண்கள் தங்கள் செக்ஸ் விருப்பங்களை வெளியிடுவதில் பெங்களூரை விட சென்னை பின் தங்கியிருந்தது. இப்போது சென்னைப்பெண்களும் செக்ஸ் பற்றிய மனத் தடைகளை கடந்து வருகின்றனர். செக்ஸ் பற்றி பெண்கள் வெளிப்படையாக பேச முடிகிறது.
ஒரு பெண் தனது பாய் பிரண்ட் பற்றி உறுதியாக இருக்கும்போது அதை தன் பெற்றோரிடம் சொல்லலாம். தங்களது பெண் சீரியஸான ஒருஉறவை வைத்திருக்கும்போது அதை பெற்றோர் அனுமதிக்க வேண்டும்.
ஒரு பெண் திருமணம் ஆகும்போது அவள் கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணங்களில் இருந்து நமது சமூகம்விடுதலையாக வேண்டும்.
கல்வி பெற்ற எந்த ஆண் மகனும் தான் திருமணம் செய்யப் போகும் பெண் கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கமாட்டான். ஆனால், திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகாமலும் பால்வினை நோய்கள் பரவி விடாமலும்பெண் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
![]() |
நான் காதலித்த நபரையே திருமணம் செய்து கொண்டேன். நாங்கள் எங்கள் உறவு குறித்து நிச்சயமாக இருந்ததால் திருமணத்துக்கு முன்பேசேர்ந்து வாழ்ந்தோம். இப்போது எங்களுக்கு இரண்டு குழந்தைகள். குழந்தைகள் எங்களுடனேயே தூங்குவதால் எங்களுக்கென்று நாங்கள்தனியாக நேரத்தை ஒதுக்க வேண்டிருக்கிறது.
மண வாழ்வில் ஈடுபடும் பெண்ணும் ஆணும் ஒருவருக்கு ஒருவர் உடல்ரீதியாகவும் மகிழ்ச்சியளிக்க வேண்டும். ஒருவரை ஒருவர்முழுமையாக திருப்தியடையச் செய்வது தான் ஆனந்தம். சில தம்பதிகள் செக்ஸ் புத்தகங்கள், படங்களைப் பார்த்து இன்பத்தை பெருக்கிக்கொள்கின்றனர். அதை தவறு என்று சொல்ல முடியாது.
பெண்கள் தங்கள் செக்ஸ் விருப்பங்களைப் பேசினால் அவர்களைத் தவறானவர்களாகப் பார்க்கும் ஆண்களின் கண்ணோட்டம் மாறவேண்டும்.
இவ்வாறு குஷ்பு பேட்டியளித்துள்ளார்.
இந்த பேட்டிக்கு பல பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. குஷ்பு, தனது கருத்தின் மூலம் தமிழ் கலாசாரத்தையும்,தமிழ்ப் பெண்களையும் கேவலப்படுத்தி விட்டார், அவமானப்படுத்தி விட்டார் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குஷ்புவின் கலாச்சார இழிவுப் பேட்டியைக் கண்டித்து தி.நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள்அமைப்பின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய குஷ்புவை தமிழகத்தை விட்டேவெளியேற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கோஷமிட்டனர்.
துடைப்பம் உள்ளிட்டவற்றுடன் பெண்கள் ஏராளமான அளவில் இப்போராட்டத்தில் கலந்து கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்புஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
போராட்டம் நடந்தபோது குஷ்பு ஊரில் இல்லை. அவர் தனது கணவர் சுந்தருடன் சிங்கப்பூர் சென்று விட்டார். இப்போராட்டம் காரணமாககுஷ்புவின் வீட்டிற்குப் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!














Click it and Unblock the Notifications