வீரப்பன் காட்டில் நக்சல்களை தேடி விடிய, விடிய வேட்டை
தர்மபுரி:
வீரப்பன் நடமாட்டம் இருந்த காட்டுப் பகுதிக்குள் ஆந்திர நக்சலைட்டுகள் ஊடுறுவியிருப்பதாகக் கூறப்படுவதையடுத்து அங்கு இரவுபகலாக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
எஸ்.பி. ஜெயராம் தலைமையில் 100 அதிரடிப் படையினர் உள்பட 200 போலீஸார் பெண்ணாகரம் காட்டுப் பகுதியில் தேடுதல்வேட்டையில் இறங்கியுள்ளனர்.கர்நாடக எல்லையில் உள்ள மாரண்டஹள்ளி, அரியலூர், பாப்பாரப்பட்டி, பேளூர், ஏமனூர் உள்ளிட்ட பல்வேறு காட்டுப் பகுதிகளில் விடியவிடிய தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இதேபோல கிருஷ்ணகிரி காட்டுப் பகுதி கிராமங்களிலும் போலீஸார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக கோவை மண்டல ஐஜி சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், உயர் போலீஸ் அதிகாரிகள் கூட்டம் சேலத்தில் நடந்தது. சேலம்டிஐஜி ஆபாஷ்குமார், சேலம் எஸ்.பி. ஆறுமுகம், தர்மபுரி எஸ்.பி. ஜெயராம், கிருஷ்ணகிரி எஸ்.பி. அசோக் குமார், நாமக்கல் எஸ்.பி.அசோக் குமார் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நக்சலைட்டுகளுக்கு எதிராக தேடுதல் வேட்டையில் ஈடுபடவும், இதற்கு அதிரடிப் படையினரைப் பயன்படுத்திக்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.
இதுவரை நக்சலைட்டுகள் ஊடுறுவல் இல்லை என்று கூறி வந்த தமிழக போலீஸார் திடீரென அதிக அளவிலான போலீஸ் படையுடன்காட்டுக்குள் புகுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications