வாசன் ஙண் இளங்கோவன்: ஏட்டிக்குப் போட்டி பச்சை குத்து
சென்னை:
காங்கிரஸ் கட்சியினர் பச்சை குத்துவதைத் தடுக்க முடியாது. அது அவர்களது விருப்பம் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்கூறியுள்ளார்.
திராவிடக் கட்சிகளின் பாணியில், தமிழக காங்கிரஸார் சமீப காலமாக பச்சை குத்திக் கொள்ளும் பழக்கத்திற்குத் தாவியுள்ளனர்.ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள்தான் இதை ஆரம்பித்து வைத்தனர்.வாசனின் பெயரை தங்களது கையில் பச்சை குத்திக் கொள்ள ஆரம்பித்ததைப் பார்த்த இளங்கோவன் ஆதரவாளர்கள் வேறு மாதிரியாககிளம்பினர்.
இளங்கோவனின் ஆதரவாளர்கள் ராகுல்காந்தியின் பெயரை தங்களது கைகளில் பச்சை குத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். பச்சைகுத்துவதிலும் இரு தரப்பினரும் கடும் போட்டா போட்டியில் இறங்க, பிற காங்கிரஸ் தலைவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெவித்துவருகின்றனர்.
இந் நிலையில் பச்சை குத்துவது குறித்து வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
காங்கிரஸ் தொண்டர்கள், தங்களது கைகளில் தலைவர்கள் பெயரை பச்சை குத்திக் கொள்வதில் தவறில்லை. அது அவர்களது விருப்பம்.அதைத் தடுக்க முடியாது. தனிப்பட்ட முறையில் அவர்கள் பச்சை குத்திக் கொள்கிறார்கள். அதில் யாரும் தலையிட முடியாது.
காங்கிரஸ் கட்சியில் நிலவும் கருத்து வேறுபாடுகள் குறித்து அவ்வப்போது கட்சி மேலிடத்திற்கு தெரிவித்து வருகிறேன். அது எனதுகடமையும் கூட. அந்தப் பணியில் நான் சரியாக இருக்கிறேன்.
கட்சியில் இளைஞர்களுக்கும் சமமான அளவில் பதவிகள் கொடுக்கப்படுகின்றன. அதேசமயம், மூத்தவர்களை புறக்கணித்து விட முடியாது.அவர்களது வழிகாட்டுதலும் அவசியம்.
கட்சிக்குள் கோஷ்டிப் பூசல் இருப்பதாக கூற முடியாது. காங்கிரஸ் போன்ற பெரிய கட்சியில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது சாதாரணவிஷயம்தான். அனைவரும் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றார் வாசன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications