துணை மேயர் காரத்தே தியாகராஜன் கைதாகிறார்?
சென்னை:
சென்னை மாநகராட்சியின் துணை மேயர் கராத்தே தியாகராஜன் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
![]() |
| முதல்வர் ஜெயலலிதாவுடன் கராத்தே மற்றும் மாநகராட்சி ஆணையர் விஜய்குமார் |
விளம்பர போர்டுகள் வைக்க கமிஷன் வாங்கிக் கொண்டு அனுமதி தந்தது, வெளிநாட்டுப் பொருட்கள் கடத்தல் கும்பல்களுடன்நெருக்கமாக இருப்பது ஆகிய புகார்களின் அடிப்படையில் அவர் கைதாகலாம் என்று கூறப்படுகிறது.
சில காலம் வரை முதல்வர் ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் நெருக்கமானவராகக் கருதப்பட்டு வந்த கராத்தே மீதுசமீபகாலமாக போயஸ் தோட்டம் அதிருப்தியில் இருந்து வருகிறது.
சமீபத்தில் மாநகராட்சிப் பூங்காக்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தபோது அந்த விழாக்களுக்கு கராத்தேஅழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கராத்தேவை பதவி நீக்கம் செய்யலாம் என்றால், சட்டச் சிக்கல் காரணமாக அதிலும் பிரச்சனை உள்ளது.
அதே நேரத்தில் துணை மேயர் பதவிக்கு மறு தேர்தல் நடத்தினால், அந்தப் பதவியை அதிமுக மீண்டும் பெற பிடிக்க முடியுமாஎன்பதும் சந்தேகமாக உள்ளது. பல அதிமுக கவுன்சிலர்கள் அதிருப்தியில் இருப்பதால் அந்த ரிஸ்க்கை எடுக்க அதிமுக தரப்புவிரும்பவில்லை.
இதனால் கராத்தேவை ஏதாவது வழக்கில் உள்ளே தள்ள சில மாதங்களுக்கு முன்பே நடவடிக்கைகள் ஆரம்பித்துவிட்டதாகபேசப்பட்டு வந்தது. அவர் மீது நடந்த விசாரணையில் சொத்துக் குவிப்பு வழக்கில் தான் அவரை உள்ளே போட முடியும் என்றுதெரியவந்ததாம்.
ஆனால், இது கட்சிக்கே கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதால் கைது திட்டம் தள்ளிப் போடப்பட்டிருந்தது.
இந் நிலையில் கராத்தேவை உள்ளே அனுப்ப சரியான காரணம் கிடைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. சென்னை நகரில் விளமபரபோர்டுகள் வைக்க அனுமதி அளித்ததில் கராத்தே பெரும் பண முறைகேடுகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் கராத்தேவை கைது செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாககாவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கராத்தேவுக்கும் மாநகராட்சி ஆணையர் விஜய்குமாருக்கும் இடையே பனிப் போர் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது. கராத்தேசெய்யும் அடாவடித்தனங்களை போயஸ் கார்டனுக்கு விஜய்குமார் அவ்வப்போது தெரிவித்து வந்தார்.
சமீபத்தில் சைதாப்பேட்டையில் மாநகராட்சி நிலத்தை விற்றதில் கராத்தே பெரும் அளவில் கமிஷன் அடித்தாகவும் ஒருஅமைச்சரே புகார் அனுப்பினாராம்.
இதற்கிடையே தன்னைக் கைது செய்தால், விஜய்காந்த் கட்சிக்குத் தாவி விட காராத்தே திட்டமிட்டுள்ளதாக அவரதுஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இந் நிலையில் கராத்தே தியாகராஜன் இப்போது சென்னையில் இல்லை என்கிறார்கள். அவர் திரும்பி வந்தவுடன் கைது படலம்அரங்கறேலாம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!













Click it and Unblock the Notifications