விஜய்காந்துக்கு காங்கிரஸ் தூது: டெல்லியில் முயற்சி
டெல்லி:
டெல்லியில் முகாமிட்டுள்ள விஜய்காந்துக்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து தூது விடப்பட்டு வருவதாக செய்திகள் வருகின்றன.
தனது தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கட்சியை தேர்தல் கமிஷனில் பதிவு செய்வதற்காக டெல்லி சென்றுள்ள விஜய்காந்த்,அங்கு பாஜக தலைவர்களுடன் ரகசிய ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இந் நிலையில் அவரை வளைக்க காங்கிரஸ் தரப்பில் இருந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. அவரைகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஜய்காந்துடன் கூட்டணி அமைக்க வேண்டும் என பாஜக தீவிரமாக முயன்று வரும் நிலையில், காங்கிரசும் அந்த முயற்சியில்இறங்கியிருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
திமுக, அதிமுக என மாறி மாறி சவாரி செய்வதை விட்டுவிட்டு விஜய்காந்துடன் கூட்டணி அமைத்தால் தங்களது கட்சியையும்வளர்க்க முடியும் என காங்கிரஸ் கருதுவதாகக் தெரிகிறது.
ஆனால், விஜய்காந்த்- பாஜக இடையே கூட்டணியை உருவாக்க தமிழகத்தின் மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் முயன்றுவருவதாகக் கூறப்படுகிறது.
டெல்லி புறப்படும் முன் சென்னையில் தனது கட்சியின் நிகழ்ச்சியொன்றில் பேசிய விஜய்காந்த்,
தேசிய முற்போக்கு திராவிட கழக தொண்டர்கள் கடுமையாக உழைத்தால், 234 சட்டசபைத் தொகுதிகளிலும் நாமே வெற்றிபெறுவோம் என்றார்.
அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சி செல்வாக்குடன் திகழ்ந்தபோது திமுக ஆரம்பிக்கப்பட்டது. அப்போது அவர்களிடம் காசுஇல்லை. ஆனாலும் கடுமையான உழைப்பால் கட்சியை வளர்த்துப் பலமாக்கினார்கள்.
திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். பிரிந்து அதிமுகவை உருவாக்கியபோது அவரிடமும் பணம் இல்லை. சொத்துக்களை விற்றுகட்சியை வளர்த்தார், கடுமையாக உழைத்து ஆட்சியையும் பிடித்தார்.
ஜெயலலிதா அதிமுகவின் தலைவராக மாறியபோது, தனது வீட்டில் இருந்த வெள்ளி டம்ளர் வரை வரை விற்றுத்தான் கட்சியைபலப்படுத்தினார். கடுமையாக உழைத்தால், முதல்வர் பதவிக்கு உயர்ந்தார்.
என்னிடம் இப்போது காசு இல்லை. ஆனாலும் கடுமையாக உழைக்கும், அயராது உழைக்கும் லட்சக்கணக்கான தொண்டர்கள்உள்ளனர். அவர்கள் தங்களது சொந்தக் காசை செலவழித்து கட்சியை வளர்த்து வருகின்றனர். எந்தக் காரணம் கொண்டும் நாங்கள்யாரிடமும் நிதி என்று கேட்டு கையேந்த மாட்டோம்.
கடுமையாக உழைத்தால், பிரதிபலன் பாராமல் உழைத்தால் வெற்றி நமக்கே. 234 சட்டசபைத் தொகுதிகளிலும் வெற்றி பெறக்கூடிய தகுதியும், தொண்டர் பலமும், மக்கள் பலமும் நமக்கு உண்டு. இதை மனதில் வைத்து தொண்டர்கள் கடுமையாகப் பாடுபடவேண்டும்.
என்னால் எப்படி ஊழலை, லஞ்சத்தை ஒழிக்க முடியும் என்று கேட்கிறார்கள். நான் எனக்காக நிறைய காசு, பணம் சம்பாதித்துவிட்டேன், எனக்கு 2 மகன்கள் மட்டுமே. அவர்கள் எப்படியாவது பிழைத்துக் கொள்வார்கள். எனவே எனக்குக் குடும்பத்தைப்பற்றிக் கவலையில்லை.
நாட்டு மக்கள்தான் இப்போதைய எனது ஒரே கவலை. எனவே என்னால் மட்டுமே லஞ்ச, ஊழலை வேரோடு அழிக்க முடியும்என்றார் விஜயகாந்த்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications