பாராசூட்டில் குதித்த இந்திய விமானப் படை தளபதி
ஹின்டான் (உத்தரப் பிரதேசம்):
![]() |
இந்திய விமானப் படையின் 73வது ஆண்டு தினத்தையொட்டி ஹெலிகாப்டரில் 4,000 அடி உயரத்தில் இருந்து பாராட்சூட்டில்குதித்து வரலாறு படைத்தால் விமானப் படைத் தலைவர் ஏர் மார்ஷல் எஸ்.பி. தியாகி.
இந்திய விமானப் படைத் தலைவர் ஒருவர் பாராட்சூட்டில் இருந்து குதிப்பது இதுவே முதல் முறையாகும்.
40 ஆண்டுக்கும் மேலாக போர் விமானியாக உள்ள தியாகி, விமானப் படைத் தலைவரான பின்னரும் அவ்வப்போது பல்வேறுவிமானங்களை இயக்கி வருகிறார். இந் நிலையில் விமானப் படையின் 73வது ஆண்டு தினத்தையொட்டி 73 வீரர்கள் பாராசூட்டில்குதித்தனர்.
இதில் தியாகியும் பங்கேற்றார். எம்.ஐ. ரக ஹெலிகாப்டரில் இருந்து தியாகி 4,000 அடி உயரத்தில் இருந்து குதித்தார். அவரைத்தொடர்ந்து இரண்டு ஆண்டனோவ் ரக விமானத்தில் இருந்து 72 விமானப் படை வீரர்கள் 8,000 அடி உயரத்தில் இருந்துகுதித்தனர். இதில் 3 பேர் பெண் வீரர்கள் ஆவர்.
இந்த நிகழ்ச்சி உத்தரப் பிரதேசத்தின் ஹின்டான் விமானப் படைத்தளத்தில் நடந்தது.
இந்திய விமானப் படையின் 73 வீரர்கள் ஒரே நேரத்தில் பாராசூட்டில் குதிப்பதும் புதிய தேசிய சாதனையாகும். இதுவரை 32வீரர்கள் குதித்ததே தேசிய சாதனையாக இருந்து வந்தது.
இந்த வயதில் பாராசூட்டில் இருந்து எப்படி குதித்தீர்கள் என தியாகியிடம் நிருபர்கள் கேட்டபோது, இதில் வயதுக்கு என்னவேலை இருக்கிறது என்று பதில் கேள்வி கேட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications