அல்சர்: 2 ஆஸ்திரேலியர்களுக்கு மருத்துவ நோபல் பரிசு
ஸ்டாக்ஹோம்:
குடல் அல்சர் மற்றும் வாய்ப்புண் ஏற்படுவதற்கான காரணத்தைக் கண்டுபிடித்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இருவிஞ்ஞானிகளுக்கு இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக அல்சர் நோயைதீர்ப்பதற்கான புதிய மருந்துகள் கண்டுபிடிப்பது சாத்தியமாகியுள்ளது.
பேரி ஜே. மார்ஷல் (54), ஜே. ராபின் வாரன் (68) ஆகிய இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுவதாக ஸ்டாக்ஹோமில் இன்றுநோபல் பரிசு கமிட்டி அறித்தது.அல்சர் மற்றும் காஸ்ட்ரிடிஸ் ஆகிய குடல் நோய்கள் குறித்து இவர்கள் ஆராய்ந்தனர். அப்போது, ஹெலிகோபாக்டர் பைரோலிஎன்ற பாக்டீரியாவால் தான் குடல் அல்சர் மற்றும் வாய்ப்புண் ஆகிய நோய்கள் ஏற்படுகின்றன என இவர்கள் கண்டுபிடித்தனர்.
குடலில் அதிகளவில் ஜீரண ரசாயனங்கள் சுரப்பதாலும், சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாவிட்டாலும், அதிக அளவில் மனஅழுத்தம் இருந்தாலும் தான் அல்சர், வாய்ப்புண் ஏற்படுகிறது என்று இதுவரை கருதப்பட்டு வந்தது.
ஆனால், இவர்களது ஆராய்ச்சியில் அல்சர், வாய்புண்ணுக்கு பாக்டீரியாவின் தாக்குதல் தான் காரணம் என்று தெரியவந்துள்ளது.இந்த எதிர்பாராத, மிகச் சிறப்பான கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.
இதுவரை இந்த நோய்களுக்கு நிரந்தரத் தீர்வில்லை என்ற நிலை இருந்தது. ஆனால், சில மருந்துகள் மற்றும் ஜீரண ரசாயனங்களின்சுரப்பைக் குறைப்பதன் மூலம் அல்சரை தீர்த்துவிடலாம் என்ற நிலையை இவர்களது ஆராய்ச்சி உருவாக்கியுள்ளது என நோபல்பரிசு கமிட்டி கூறியுள்ளது.
இதில் மார்ஷல், மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கால்கோர்லியைச் சேர்ந்தவர். இவர் நெட்லேன்சில் உள்ள க்யூ.ஈ.ஐ.ஐ மருத்துவமையத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார்.
அடிலைடைச் சேர்ந்த வாரன், பெர்த் நகரில் ள்ள ராயல் பெர்த் மருத்துவமனையில் நோய் தாக்குதல் பிரிவில் ஆராய்ச்சியாளராகஇருந்தவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications