ஓடும் பஸ்சில் வியாபாரியை வெட்டி ரூ. 3 லட்சம் கொள்ளை
மதுரை:
மதுரை அருகே ஓடும் பஸ்சில் வியாபாரியை அரிவாளால் வெட்டிய கும்பல் ரூ. 3 லட்சத்தைக் கொள்ளையடித்துக் கொண்டுதப்பியது.
விருதுநகரைச் சேர்ந்தவர் சந்திர பிரகாசம் (47). பருப்பு, மிட்டாய் மொத்த வியாபாரம் செய்து வரும் இவர், அனுப்பப்பட்டசரக்குகளுக்கு பணத்தை வசூலிக்க மதுரை வந்தார்.வழக்கம்போல் மதுரை கீழமாசி வீதியில் கடைகளில் ரூ. 3 லட்சம் பணத்தை வசூல் செய்துவிட்டு நள்ளிரவில் பெரியார் பஸ்நிலையம் வந்தார். அங்கிருந்து விருதுநகர் செல்ல, கோவில்பட்டி செல்லும் பஸ்சில் ஏறினார். அதில் 30 பயணிகளே இருந்தனர்.
நள்ளிரவு 1.30 மணியளவில் பஸ் திருமங்கலத்தைக் கடந்து கரிசல் பட்டி அருகே சென்று கொண்டிருந்தது. பயணிகள்அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நிலையில், பஸ்சில் அமர்ந்திருந்த 6 பேர் எழுந்து டிரைவரிடம் சென்றனர்.
அவரது கழுத்தில் அரிவாளை வைத்து பஸ்ஸை நிறுத்தக் கூறினர். மிரண்டு போன டிரைவர் பஸ்ஸை நிறுத்தினார். இதையடுத்துசந்திரபிரகாசத்திடம் வந்த அக் கும்பல், அவரது இரு கைகளிலும் வெட்டியது.
மற்ற பயணிகள் அலறிக் கத்த, துடித்தபடியே சரிந்த சந்திர பிரகாசத்திடம் இருந்து பணப் பையை எடுத்துக் கொண்டு அக் கும்பல்பஸ்சிலிருந்து இறங்கி இருட்டில் கலந்து ஓடிவிட்டது.
பலத்த வெட்டுக் காயத்துடன் மயக்கமான சந்திரபிரகாசம் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரை மதுரை பஸ் நிலையத்தில் இருந்தே அக் கும்பல் தொடர்ந்து வந்துள்ளதாகத் தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications