பெண்களிடம் குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்: ராமதாஸ்
சென்னை:
பெண்கள் இயக்கத்தினரிடம் குஷ்பு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும்,விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவனும் கூறியுள்ளனர்.
இருவரும் இன்று கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது ராமதாஸ் கூறியதாவது:திருமணத்துக்கு முன் பெண்கள் செக்ஸ் வைத்துக் கொள்வது தவறில்லை என்று குஷ்பு கூறுவது தமிழ்ப் பண்பாட்டுக்கு முரணானது.படித்த ஆண் தனக்கு மனைவியாக வருபவர் கன்னித்தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான் என்றும்அவர் கூறியிருக்கிறார்.
குஷ்புவின் கருத்து பரவினால் குடும்ப உறவுகள் சீரழியும். இளைஞர்களின் வாழ்வில் ஒழுக்கம் இல்லாமல் போய்விடும்.
எனவே தான் பெண்களும், இளைஞர்களும் சேர்ந்து குஷ்புவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். வழக்குகள்போட்டுள்ளனர்.
குஷ்புவுக்கு எதிரான போராட்டத்தை நானும் திருமாவளவனும் தூண்டி விடுவதாக கூறுவதி சரியல்ல. எங்கள் இயக்கங்களில்இல்லாத பெண்களும் கூட குஷ்புவுக்கு எதிராக போராடுகிறார்கள்.
இந்த நடிகையின் கருத்து நாகரீகமான முற்போக்கு சிந்தனை என்று சொல்லி சிலர் வக்காலத்து வாங்கியுள்ளனர். இதுகேவலமானது. குஷ்புவை ஆதரிக்கும் சிலர் பெரியாரையும் துணைக்கு அழைத்துள்ளனர். பெண்கள்அடிமைப்படுத்தப்படுவதைத் தான் பெரியார் சுட்டிக் காட்டினார்.
சென்னை ஹோட்டலில் ஆண்களும் பெண்களும் குடித்துவிட்டு ஆட்டம் போட்டதை போலீஸ் கமிஷ்னர் கண்டித்து நடவடிக்கைஎடுத்துள்ளார். இந்த களியாட்டத்தைக் கூட சிலர் ஆதரித்து எழுதுகின்றனர். இது வேதனையாக உள்ளது.
பிரபலமான டைரக்டர் பாலசந்தர் எடுத்த கல்கியும் ஷங்கர் எடுத்த பாய்ஸ் படமும் ஓடவில்லை. காரணம், ஒழுக்க சீர்கேட்டைஅந்தப் படங்கள் ஆதரித்தது தான். இது போன்ற படங்களை தமிழ் மக்கள் ஏற்க மாட்டார்கள்.
அதே போலத்தான் குஷ்புவின் கருத்தையும் தமிழகப் பெண்கள் புறக்கணித்து போராடுகிறார்கள்.
யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்கிறேன் என்று குஷ்பு சொல்வது மன்னிப்பே அல்ல. எல்லோர்மனதையும் புண்படுத்திய குஷ்பு பெண்கள் இயக்கத்தினரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
திருமாவளவன் கூறுகையில், பொது நலனுக்கும் சமூக ஒழுக்கத்துக்கும் எதிரானது குஷ்புவின் கருத்து. இதை அனைவரும்கண்டித்தே ஆக வேண்டும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications