சேலம் அருகே பயங்கர விபத்து: மரத்தில் பஸ் மோதி 9 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சேலம்:

சேலம் அருகே தனியார் பஸ் ஒன்று பயங்கர வேகத்தில் சாலையோர மரத்தின் மீது மோதியதில் 9 பேர் பலியானார்கள். மேலும் 20 பேர்காயமடைந்தனர்.

நேற்றிரவு இந்த விபத்து நடந்தது. தர்மபுரி மாவட்டம் அரசூர் நோக்கி சென்று கொண்டிருந்த அந்த பஸ்ஸை பயங்கர வேகத்தில்ஓட்டியிருக்கிறார் அதன் டிரைவர்.

இரவு 9.30 மணியளவில் வலசையூர் என்ற இடத்தில் அந்த பஸ் கட்டுப்பாடில்லாமல் ஓடி மரத்தின் மீது மோதியது. இதில் பஸ்சில் இருந்த 9பயணிகள் அந்த இடத்திலேயே பலியாயினர். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.

விபத்து நடந்தவுடன் காயமடைந்தவர்களுக்கு உதவாமல் அந்த பஸ்சின் டிரைவரும் கண்டக்டரும் தப்பியோடிவிட்டனர்.

காயமடைந்தவர்களை பொது மக்கள் காப்பாற்றி சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அந்த தனியார் பஸ்சில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்ததாகத் தெரிய வந்ததுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+