சேது திட்டம்: யார் பெரியவர்?: இளங்கோவன் புது விளக்கம்
திருச்செந்தூர்:
சேது சமுத்திரத் திட்டத்தை கேட்டது யார் என்பது பெரிதல்ல, கொடுத்தது யார் என்பதே பெரிது என மத்திய அமைச்சர்இளங்கோவன் கூறினார்.
திருச்செந்தூரில் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் இளங்கோவன்பேசியதாவது:மாதந்தோறும் மந்திரியை மாற்றிக் கொண்டிருந்த ஜெயலலிதா என்னவோ 6 மாதமாய் எந்த மந்திரியையும் மாற்றவில்லை.
தமிழக மக்களின் பல்லாண்டு கால கோரிக்கையான சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. இதனால்காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு நல்ல பெயர் கிடைத்துவிட்டதை பொறுக்க முடியாத ஜெயலலிதா அதைத் தடுக்கப் பார்க்கிறார்.
அண்ணா, கருணாநிதி, வைகோ ஆகியோர் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி பாடுபட்டார்கள். இப்போதுசோனியாவின் முயற்சியால் அத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. கேட்டது யார் என்பது பெரிதல்ல, கொடுத்தது யார் என்பதேபெரிது.
காமராஜர் ஜெயிலில் இருந்தார். வெள்ளையனை எதிர்த்துப் போராடி நாட்டுக்காக சிறை சென்றார் கர்மவீரர். ஆனால் ஜெயலலிதாஎதற்காக ஜெயலுக்குப் போனார். ஊழல் வழக்கில் உள்ளே போனவர் அவர். விரைவில் அவரது ஆட்சிக்கு முடிவு வரும்,நல்லாட்சி மலரும் என்றார்.












Click it and Unblock the Notifications