கேஏஎஸ் சேகர் வீட்டில் வருமான வரி ரெய்டு
மதுரை:
லாட்டரி அதிபர் கே.ஏ.எஸ்.சேகர், அவரது மகள், சகோதரர் ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடிசோதனையை மேற்கொண்டனர்.
லாட்டரி அதிபராக ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த கே.ஏ.எஸ். சேகர், ரியல் எஸ்டேட் உள்பட பல்வேறு தொழில்களில்முதலீடு செய்துள்ளார். மதுரை நகரில் பல்வேறு பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டி விற்று வருகிறார்.இந் நிலையில் லாட்டரிக்குத் தடை விதித்தது தமிழக அரசு. இந்தத் தடையை நீக்கக் கோரி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மிகநெருக்கமான பெரியகுளம் பிரமுகரிடம் ரூ. 4 கோடி தந்தார். ஆனால், தடை நீக்கப்படவில்லை. இதையடுத்து தான் கொடுத்த 4கோடியை திரும்பக் கேட்டார்.
அப்போது தான் சேகருக்கு ஆரம்பித்தது ஏழரை சனி. காசைத் தர அந்த பிரமுகர் மறுக்க, தனது செல்வாக்கைப் பயன்படுத்திகொடுத்த காசை திரும்ப வாங்கினார். இதையடுத்து தொடர்ந்து பல வகைகளிலும் அரசின் நெருக்கடிக்கு ஆளாகி வருகிறார்.
லாட்டரித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகக் கூறி வழக்குப்போட்டது வணிக வரித்துறை. ஏகப்பட்ட அபராதமும் போடப்பட்டது. அந்த வழக்கில் கைதும் செய்யப்பட்டார் சேகர்.
மாநில அரசிடம் சிக்கி சின்னாபின்னாவாகி வரும் சேகர் பிராடுத்தனங்களுக்கும் பெயர் போனவரே.
ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள அவர் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்துள்ளார். இதையடுத்து வருமானவரித்துறையின் ரகசிய பார்வையில் இருந்து வந்தார்.
இந் நிலையில் புதன்கிழமை மதுரையில் உள்ள கே.ஏ.எஸ். சேகரின் வீடு, மகள் மற்றும் சகோதரர் மணிமாறனின் (இவர் தினபூமிநாளிதழின் அதிபர்) வீடு ஆகியவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின்போது சேகரின் வீட்டிலிருந்து ஐந்தரை கிலோ தங்கம், ரூ. 3 கோடி மதிப்பிலான சொத்துக்கள் தொடர்பானஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேகரின் மகள் மற்றும் சகோதரரின் வீட்டிலிருந்து ரூ. 30 லட்சம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. எட்டு குழுக்களாகப்பிரிந்து வருமான வரித்துறையினர் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications