அமைச்சர்களை உள்ளே தள்ளலாம்: ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்:
லட்சக்கணக்கான போலி வாக்காளர்களை சேர்த்த தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவினரைசிறையில் அடைக்க வேண்டும்என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
திண்டிவனத்தையடுத்துள்ள தைலாபுரத்தில் தனது வீட்டில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில், 19 லட்சம் போலிவாக்காளர்களை அதிமுக அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளனர்.அவர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்து சிறையில் தள்ள வேண்டும். சிறைத் தண்டனை பெற்றுத் தரஉறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்க பலமுறை எதிர்ப்பு தெரிவித்து வந்தார் ஜெயலலிதா. ஆனால் இப்போது தேர்தல்நெருங்கி வருவதால், இட ஒதுக்கீடு குறித்து பரிசீலிப்பதாக கூறுகிறார். ஜெயலலிதாவின் இந்தப் பேச்சை சிறுபான்மை சமூகமக்கள் நம்பவே மாட்டார்கள் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications