தயாரிப்பாளர் கடத்தல்: பாலாவிடம் போலீஸ் விசாரணை
சென்னை:
அது ஒரு கனாக்காலம் படத்தின் தயாரிப்பாளர் சாய் சிதம்பரத்தைக் கடத்தியது தொடர்பாக இயக்குநர் பாலாவிடம் போலீஸார்விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர் பிரச்சினை முடிந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தயாரிப்பாளர் சாய் சிதம்பரத்தை, இயக்குநர்கள் பாலா, சீமான் ஆகியோர் கடத்திச் சென்று இயக்குநர் பாலு மகேந்திராவின்அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு வைத்து அனைவரும் சேர்ந்து மிரட்டியதாகவும், சாய் சிதம்பரம் எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக இயக்குநர் பாலு மகேந்திரா மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.சிதம்பரம் கதை கட்டுகிகறார் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந் நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வருமாறு கூறி பாலா, சீமானுக்கு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர்.சீமான் ஹைதராபாத் சென்று விட்டதால் அவர் வரவில்லை. ஆனால் பாலா எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்திற்கு வந்தார்.
அப்போது போலீஸாரிடம் அவர் கூறுகையில்,
சாதாரணமாகத்தான் சாய் சிதம்பரத்தை நாங்கள் அழைத்துச் சென்றோம். பாலு மகேந்திராவுக்குத் தர வேண்டிய பணத்தைத்தருமாறுதான் கேட்டோம். மற்றபடி மிரட்டவில்லை, கடத்தவில்லை என்றார்.
இந்த விளக்கத்தை கூட இருந்த சாய் சிதம்பரத்தின் வழக்கறிஞர் ஏற்றுக் கொண்டார்.
சாய் சிதம்பரத்திற்கு பாதுகாப்பு தர வேண்டும் என இன்ஸ்பெக்டர் ரமேஷிடம் கோரிக்கை வைத்தார். அதை இன்ஸ்பெக்டர்ஏற்றார்.
பின்னர் இன்ஸ்பெக்டர் கூறுகையில், இந்தப் பிரச்சினை சாதாரண ஒன்றுதான். இயக்குநர் பாலாவின் விளக்கத்தோடு அது முடிந்துவிட்டது. தேவைப்பட்டால் மற்றவர்களிடம் விசாரணை நடத்துவோம் என்றார்.












Click it and Unblock the Notifications