காடுவெட்டி குருவை விடுவிக்க ராமதாஸ் கோரிக்கை
சேலம்:
கைது மிரட்டல் மூலம் பாமகவை நிலை குலைய வைக்க அதிமுக அரசு முயற்சி செய்கிறது. கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ. காடுவெட்டி குருவை உடனே விடுதலை செய்ய வேண்டும் என அக்கட்சியின் நிறுவனர்ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருகிறது. களத்தில் தனித்து விடப்பட்டுள்ளதால் அதிமுக ஆட்சியாளர்கள் அடக்குமுறையை ஏவிவிட்டுள்ளார்கள். குறிப்பாக பாமகவையும், அதன் முன்னணி தலைவர்களையும் அச்சுறுத்தி, பழிவாங்கும் வேலையில் அதிமுகஆட்சியாளர்கள் படுவேகமாக ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களின்போது கைதாகும் தொண்டர்களை அன்றைய தினமே விடுவித்து விடுவது நடைமுறை.ஆனால் அதற்கு மாறாக, பாமகவினரை மட்டும் அரசு இதுவரை விடுதலை செய்யவில்லை.
கைதான தொண்டர்கள் ஜாமீனில் கூட விடுதலை ஆக முடியாத அளவுக்கு முட்டுக்கட்டைகள் போடுகிறது அதிமுக அரசு.நிபந்தனை ஜாமீனில் வெளியே வருவோர் தினசரி காவல் நிலையங்களுக்கு அலைய வைக்கப்படுகிறார்கள்.
பாமக எம்.எல்.ஏ. குருவை இன்னும் சிறையில் அடைத்து வைத்திருக்கிறது இந்த அரசு. இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டமறு நிமிடத்தில் இன்னொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறி அவரை தொடர்ந்தது சிறைக் காவலில் அடைத்துவைத்திருக்கிறார்கள்.
இந்த வழக்கில் அவர் ஜாமீனில் விடுதலை ஆவதற்கும் அரசு முட்டுக் கட்டை போட்டு வருகிறது. இது ஆட்சியாளர்களின் பழிவாங்கும் வேலையே அன்றி வேறொன்றும் இல்லை. இதை மிக வன்மையாக கண்டிக்கிறோம்.
இதுபோன்ற அச்சுறுத்தல்களால் பாமகவை நிலை குலைய வைத்து விட முடியாது. கட்டாயக் காவலில் வைக்கப்பட்டுள்ள குருவைஉடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications