மதுரை மேயரின் காரில் பயணம் செய்த பாஜக பெண் கவுன்சிலர் விபத்தில் பலி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மாநகராட்சி திமுக மேயர் செ.ராமச்சந்திரனின் காரில் பயணம் செய்த பாஜக கவுன்சிலர் பாண்டிச்செல்வி விமான நிலையம்அருகே நடந்த சாலை விபத்தில் பலியானார்.
மதுரை மாநகராட்சி பாஜக பெண் கவுன்சிலர் பாண்டிச்செல்வி. இவர் நேற்று மேயர் செ.ராமச்சந்திரனுக்குச் சொந்தமான குவாலிஸ்கால் பயணித்துள்ளார். கார் விமான நிலையம் அருகே உள்ள சின்ன உடைப்பு என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்தபேருந்துடன் மோதியது.இந்த விபத்தில் பாண்டிச்செல்வி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். காரை ஓட்டி வந்த டிரைவர் கண்ணன், சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
திமுகவைச் சேர்ந்த மதுரை மேயரின் காரில் பாஜக பெண் கவுன்சிலர் ஏன் பயணம் செய்தார்? என்பது பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து மதுரை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்தகவுன்சிலர் பாண்டிச் செல்விக்குகணவரும், ஒரு குழந்தையும் உள்ளனர்.
விபத்து நடந்தபோது ராமச்சந்திரனும் காரில் தான் இருந்தார் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications