விஜய், விக்ரம், ஷங்கர், த்ரிஷா, நயனதாரா, ரஹ்மான், யுவன் வீடுகளில் வருமான வரி அதிரடி ரெய்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர்கள் விக்ரம், விஜய், விவேக், நடிகைகள் ஆசின், நயன்தாரா, த்ரிஷா, ஸ்னேகா, இயக்குனர்கள் ஷங்கர், எஸ்.ஜே. சூர்யா,தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன், இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரஹ்மான், யுவன்ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ்ஆகியோரது வீடுகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்த் திரையுலகில் அவ்வப்போது வருமான வரித்துறை சோதனை நடைபெறுவது வழக்கமான ஒன்று. ஆனால் இன்று திரைத்துறையினருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படும் வகையில் முன்னணி நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள்,தயாரிப்பாளர் ஆகியோரது வீடுகளில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.

விஜய்யின் கல்யாண மண்டபங்கள்:

Vijay

சாலிகிராமத்தில் உள்ள விஜய் வீட்டில் காலை முதல் சோதனை நடந்து வருகிறது. விஜய்க்கு சொந்தமாக 3 கல்யாண மண்டபங்கள்உள்ளன. சமீபத்தில் அசோக் நகரில் ரூ. 3 கோடி மதிப்பிலான புதிய சொத்தையும் அவர் வாங்கியுள்ளார்.

ஒரு படத்திற்கு ரூ. 4 கோடி வரை சம்பளமாக பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது போக கருப்புப் பணமாகவும் சிலகோடிகளை பெறுகிறார்.

ஜெயம் ரவி, விக்ரம், விவேக்:

Vikram

இதேபோல பெசன்ட் நகரில் உள்ள விக்ரம் வீட்டிலும் 6 பேர் கொண்ட குழு சோதனை நடத்தி வருகிறது. நடிகர் ஜெயம் ரவியின்அசோக் நகர் வீட்டிலும், விவேக் வீட்டிலும் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதில் ஜெயம் ரவியின் அப்பா எடிட்டர் மோகன் தான் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ரவி தனது தந்தையுடன்தங்கியுள்ளதால் அந்த வீட்டில் தான் சோதனை நடக்கிறது.

ஷங்கரின் ரூ. 10 கோடி:

தி.நகரில் உள்ள இயக்குனர் ஷங்கரின் வீட்டிலும் அதிரடி சோதனை நடந்து வருகிறது. சமீபத்தில் வெளியான அந்நியன்படத்துக்கு ஷங்கருக்கு பெரும் சம்பளம் தரப்பட்டது நினைவிருக்கலாம். இதுதவிர அவரது தயாரிப்பான காதல் படமும் பெரும்வசூலை வாரிக் குவித்தது.

இப்போது ரஜினியை வைத்து இயக்கப் போகும் சிவாஜி படத்துக்கு அவருக்கு ரூ. 10 கோடி சம்பளம் பேசப்பட்டு, பெரியஅளவில் அட்வான்சும் கொடுக்கப்பட்டுள்ளது.

எஸ்.ஜே.சூர்யா:

இதேபோல நியூ, அதைத் தொடர்ந்து அன்பே ஆருயிரே மூலம் பெரும் பணத்தை லாபமாக சம்பாதித்துள்ள இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா வீட்டிலும் இன்று சோதனை நடந்து வருகிறது.

அந்நியன் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் வீடும் சோதனையில் இருந்து தப்பவில்லை. அவரதுவீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனை போட்டு வருகின்றனர்.

ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா:

A R Rahman

இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோரது வீடுகளிலும் அதிரடி சோதனைநடந்து வருகிறது. யுவன்சங்கர் ராஜா தந்தை இளையராஜாவுடன் தான் தங்கியுள்ளார். இதனால் இளையராஜாவின் வீட்டில் தான்ரெய்டு நடக்கிறது.

ரூ. 1 கோடி த்ரிஷா:

Trisha

நடிகை த்ரிஷாவின் புரசைவாக்கம் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாகஉள்ள த்ரிஷாவுக்கு தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க ரூ. 1 கோடி சம்பளமாக அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவரதுவீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் துருவித் துருவி சோதனை நடத்தி வருகின்றனர்.

ஸ்னேகா:

Sneha

இதேபோல நடிகை ஸ்னேகாவின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசின், நயனதாரா ஹோட்டல் அறைகளில்:

Asin

நடிகைகள் அசின், நயன்தாரா ஆகியோரும் இந்த சோதனையிலிருந்து தப்பவில்லை. இருவரும் ஹோட்டல்களில் தங்கியுள்ளனர்.அவர்கள் தங்கியுள்ள ஹோட்டல் அறைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை போட்டனர்.

ரெய்ட் நடந்தபோது நயனதாரா சென்னையில் இல்லை. ஆனாலும் அவரது ஹோட்டல் அறையின் சாவியை வாங்கி வருமானவரித்துறை சோதனை போட்டது.

காலை 6 மணி முதல் இந்த அதிரடி சோதனை தொடர்ந்து நடந்தது.

வருமான வரித்துறை அதிகாரிகளின் இந்த அதிரடி சோதனை திரைத் துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. இந்த சோதனையின்போது சிக்கிய பணம், ஆவணங்கள் குறித்த விவரங்கள் இன்று மாலை தெரிய வரலாம்என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+