அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்த அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் மார்ட்டின்.. ஷாக்கில் ர.ரக்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: லால்குடி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ லீமா ரோஸ் மார்ட்டின், தவெகவை சேர்ந்த அமைச்சர் செங்கோட்டையனை, தலைமைச் செயலகத்தில் திடீரென சந்தித்து பேசியது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தவெக பெரும்பான்மை பெறாத நிலையில், திமுக கூட்டணியில் வென்ற காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு, தவெக ஆட்சி அமைத்துள்ளது. இதற்கிடையே, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, கட்சி தலைமை உத்தரவை மீறி, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்களில் சிலர், பதவியை ராஜினாமா செய்து விட்டு, தவெகவில் இணைந்தனர்.

aiadmk leema rose martin tvk

இதுவரை மூன்று முன்னாள் அமைச்சர்கள் உட்பட ஆறு அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்துள்ளனர். முதல்வர் விஜய் தனது எம்.எல்.ஏ ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியை சேர்த்து 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

இந்நிலையில், அதிமுகவில் இருந்து, எம்எல்ஏக்களை இழுக்க குதிரை பேரம் நடந்து வருபதாக, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எம்எல்ஏக்களை இழுக்கும் முதல்வர் விஜய் களவாணி என கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், மேலும் சில அதிமுக எம்எல்ஏக்களை, தங்கள் பக்கம் இழுக்க தவெக தரப்பில் பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட சிலர், எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருப்பதால், விரைவில் கட்சி தாவல் நடக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், லால்குடி தொகுதி அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் மார்ட்டின் நேற்று தலைமைச் செயலகம் வந்தார். அங்கு, வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறைக்கு சென்று அவரை சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு, 10 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது. இந்தச் சந்திப்புக்கான காரணம் குறித்து, இரு தரப்பினரும் தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

எடப்பாடி பழனிசாமி மீது எழுந்த அதிருப்தியால், சட்டசபை தேர்தலுக்கு முன் தவெகவுக்கு தாவி, தேர்தலில் வென்று அமைச்சரானவர் செங்கோட்டையன். அவரை, அதிமுகவைச் சேர்ந்த எம்எல்ஏ லீமா ரோஸ் திடீரென சந்தித்துப் பேசியுள்ளது, அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ. லீமாரோஸ், எனக்கு வாய்ப்பு கொடுத்து எம்.எல்.ஏ ஆக்கினீர்கள். எந்த சூழலிலும் அ.தி.மு.கவை விட்டு போக மாட்டேன். இந்த கட்சிக்காக என்றும் உண்மையாக இருப்பேன். உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் எனப் பேசியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+