பெண் கவுன்சிலர் சாவு: மதுரை திமுக மேயர் கைது
திருச்சி:
![]() |
மதுரை பாஜக பெண் கவுன்சிலர் பாண்டீஸ்வரி மர்ம சாவு தொடர்பாக தேடப்பட்டு வந்த மதுரை மாநகராட்சிமேயர் செ. ராமச்சந்திரன் திருச்சியில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.
மதுரை மாநகராட்சியின் 28வது வார்டு பாஜக கவுன்சிலர் பாண்டீஸ்வரி. இவர் சில தினங்களுக்கு முன்புபெருங்குடி அருகே நடந்த சாலை விபத்தில் மரணமடைந்தார். அவர் பயணம் செய்த கார் செ. ராமச்சந்திரனுக்குசொந்தமானது என்பதால் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விபத்துக்குப் பின்னர் காரை ஒட்டி வந்த மேயர் செ. ராமச்சந்திரன் தலைமறைவாகி விட்டார்.
அதன் பின்னர் காரை ஓட்டி வந்தது தான் தான் என்று கண்ணன் என்ற டிரைவர் போலீசாரிடம் சரணடைந்தான்.அவனை துருவி துருவி விசாரித்த போது மேயர் கேட்டுக் கொண்டதின் பேரில் நான் சரணடைந்தேன் என்றுபோலீசாரிடம் தெரிவித்தான்.
எனவே போலீசார் மேயர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதை தொடர்ந்து டிஐஜி கருணா சாகர் உத்தரவின் பேரில் கூடுத்ல் போலீஸ் சூப்பிரண்டு அமீத் குமார் சிங்தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் மேயர் ராமச்சந்திரனை அவரது வீடு, நண்பர்கள்,உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் வலை வீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை அவரை திருச்சியில் வைத்து போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி கே.கே.நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடி போலீஸார், அப்பகுதியில் மர்மானமுறையில் நன்றிருந்த காரை சோதனையிட்டபோது அதில் செ. ராமச்சந்திரன் மறைந்திருந்தது தெரிய வந்தது.இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார், செ.ராமச்சந்திரனை தேடி வரும் மதுரை திருப்பரங்குன்றம்போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து திருப்பரங்குன்றம் போலீஸார் திருச்சி விரைந்து சென்று ராமச்சந்திரனை தங்களது கட்டுப்பாட்டில்எடுத்தனர்.
செ. ராமச்சந்திரனை திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுக்க போலீஸார் முடிவுசெய்துள்ளனர். அவரிடம் நடத்தப்படவுள்ள விசாரணையின் போது பாண்டீஸ்வரி மரணம் தொடர்பான பல்வேறுகுழப்பங்களுக்கு முடிவு கிடைக்கும் எனத் தெரிகிறது.
இதற்கிடையில் விபத்தில் இறந்த பெண் கவுன்சிலர் பாண்டீஸ்வரியின் கணவர் ரமேஷ் மேயர் மீது பரபரப்பு புகார்கொடுத்துள்ளார். அதில் என் மனைவி கார் விபத்தில் பலியாகவில்லை, அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்என்றும், அதற்குறிய ஆவணங்கள் என்னிடம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications