குலாம் நபி வீடு அருகே கார் குண்டுவெடித்து 10 பேர் பலி
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வராக குலாம் நபி ஆசாத் இன்று பொறுப்பேற்க உள்ளநிலையில் குலாம் நபி ஆசாத் மற்றும் முன்னாள் முதல்வர் முப்தி முகம்மது சயீத்ஆகியோரின் வீடுகளுக்கு அருகே கார் குண்டு வெடித்து 10 பேர் பரிதாபமாகபலியானார்கள்.
காஷ்மீர் முதல்வராக குலாம் நபி இன்று மாலை பொறுப்பேற்கவுள்ளார். இந்தநகழ்ச்சி ஸ்ரீநகரில் நடைபெறுகிறது. சோனியா காந்தி இதில் கலந்து கொள்கிறார்.இதையொட்டி ஸ்ரீநிகரில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் ஸ்ரீநகர் நிவ்காங் சாலைப் பகுதியில் குலாம் நபி ஆசாத், சயீத்ஆகியோரின் வீடுகளுக்கு அருகே இன்று சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.காரில் வைக்கப்பட்டிருந்த இந்த வெடிகுண்டு வெடித்ததில் 10 பேர் சம்பவஇடத்திலேயே உடல் சிதறி இறந்தனர். 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவுகிறது.பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ் இ மொகம்மது தீவிரவாத இயக்கம் இந்த சம்பவத்திற்குப்பொறுப்பேற்றுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த தீவிரவாதி தான் இந்த வெடிகுண்டுசம்பவத்தை மேற்கொண்டுள்ளான் என்பதும் தெரிய வந்துள்ளது.
வெடிகுண்டு சம்பவத்தைத் தொடர்ந்து ஸ்ரீநகரில் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது. பதவியேற்பு விழா நடைபெறும் இடத்தில் அதிக அளவில்ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications