குலாம் நபி ஆசாத்திற்கு கருணாநிதி வாழ்த்து
சென்னை:
காஷ்மீர் மாநிலத்தின் புதிய முதல்வராக குலாம் நபி ஆசாத் பதவியேற்றார். அவருக்கு திமுக தலைவர் கருணாநிதிவாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
காஷ்மீரில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.இதையடுத்து மக்கள் ஜனநாயக கட்சியும், காங்கிரசும் இணைந்து கூட்டணி அமைத்தன.காஷ்மீரில் ஒரு அரசு 6 ஆண்டு பதவி வகிக்கலாம். அதன்படி முதல் 3 ஆண்டு காலம் மக்கள் ஜனநாயக கட்சிசார்பில் முப்தி முகமது சயீத் முதல் மந்திரியாக பதவி ஏற்றார். தனது பதவிக்காலம் 2005 அக்டோபர் மாதம்முடிந்ததை தொடர்ந்து அவர் ராஜினாமா செய்தார்.
இதை தொடர்ந்து புதிய காஷ்மீர் முதல்-மந்திரியாக காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத் இன்று 10 வதுமுதல்வராக ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மைய மண்டபத்தில் நடந்த எளிய விழாவில் மாநில கவர்னர்எஸ்.கே.சின்கா முன்னிலையில் பதவியேற்றார்.
அவருக்கு கவர்னர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இதையடுத்து காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ள குலாம் நபி ஆசாத்திற்கு திமுக தலைவர் கருணாநதிவாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆசாத்திற்கு கருணாநதி அனுப்பியுள்ள கடிதத்தில், ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் பதவிபெரும் சவாலான ஒன்று. ஆனால் தங்களின் ஆழ்ந்த அனுபவம் இந்த சவாலை எதிர்கொள்ள பெரிதும் துணைநிற்கும்.
தங்களது பதவிக்காலத்தில் காஷ்மீர் மேலும் வளர்ச்சி அடையும் என்பதில் சந்தேகம் கிடையாது என்று கூறியுள்ளார்கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications