தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு இழுத்தடிப்பு?
சேலம்:
தர்மபுரி அருகே வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் 3 பேர் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டவழக்கை விசாரித்து வரும் சேலம் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி கிருஷ்ணராஜா நீண்ட விடுப்பில் சென்று விட்டார்.
இதனால் வழக்கு விசாரணை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டலைவாங்கிய வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதித்து தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி அருகே கோவைவேளாண் பல்கலைக்கழக மாணவ, மாணவியர் வந்த பேருந்தை வழிமறித்து அதிகமுவினர் தீவைத்தனர்.
இதில் கோகிலவாணி, காயத், ஹேமலதா ஆகியோர் உயிருடன் கருகி இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாகதர்மபுரி ஒன்றிய அதிமுக செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட 31 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீதான வழக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில்தற்போது சேலம் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகள் இந்த வழக்கில் விசாக்கப்பட்டுள்ளனர். இன்னும் சில சாட்சிகளே விசாரிக்கப்படவேண்டியுள்ளது. இந்த நிலையில் கடந்த 2 மாதமாக வழக்கு விசாரணை நடைபெறவில்லை.
வழக்கை விசாரித்து வரும் நீதிபதி கிருஷ்ண ராஜா நீண்ட நாள் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். இதனால்வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இவ்வழக்கு வியாழக்கிழமை நீதிபதி கம்மது அலிமுன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை வருகிற 18ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். படு வேகமாக நடந்து வந்தவிசாரணை திடீரென சுணங்கியுள்ளது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வழக்கில் விரைவில் தீர்ப்பு அளிக்கப்பட்டால், அது ஆளும் கட்சிக்கு பாதகமாக அமைந்து விட்டால்,சட்டசபைத் தேர்தலில் அது எதிரொலிக்கலாம் என்பதால், வேண்டும் என்றே வழக்கு விசாரணையைதாமதப்படுத்தும் முயற்சியே இது என்று ஒரு சாரார் கூறுகிறார்கள்.
அரசு வழக்கறிஞர் சீனிவாசன் இதுகுறித்துத் தெரிவிக்கையில், இன்னும் 12 சாட்சிகள்தான் விசாரிக்கப்படவேண்டும். அவர்களை விசாரித்து முடித்து விட்டால் தீர்ப்பு வழங்கப்பட்டு விடும். ஆனால் தற்போதுதேவையில்லாத தாமதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications