மீண்டும் மிதக்கிறது சென்னை
சென்னை:
சென்னை நகரில் மீண்டும் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு வார இடைவெளிக்குப் பின்னர்மழை வெள்ளத்தில் சென்னை நகரம் மிதக்க ஆரம்பித்துள்ளது.
பல இடங்களில் வெள்ள நிவாரணம் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் இறங்கினர்.சென்னைக்கு கிழக்கே வங்கக் கடலில் தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையே உருவாகியுள்ள குறைந்தகாற்றழுத்த நிலை வலுவடைந்திருப்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்குக் கன மழை பெய்யும் என வானிலைஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து நேற்று மாலை முதல் சென்னை நகரில் கன மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் பலஇடங்களில் மிக கனத்த மழையும், புறநகர்ப் பகுதிகளில் விட்டு விட்டு பலத்த மழையும் பெய்து வருகிறது.
இதன் காரணமாக நகரின் பல்வேறு தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. பல சாலைகளில் மழை நீர்ஆறு போல ஓடுகிறது. புளியந்தோப்பு, வியாசர்பாடி, வால்டாக்ஸ் சாலை உள்ளிட்ட பல இடங்களில் தண்ணீர்முழங்கால் அளவுக்கு ஓடுகிறது.
கடந்த வாரம் பெய்த கன மழையால் தேங்கியுள்ள நீரே இன்னும் சரியாக வடியாத நிலையில் மறுபடியும் கன மழைபெய்யத் தொடங்கியிருப்பதால் சென்னை மக்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கொளத்தூர் பகுதியில் வெள்ள நவாரணம் கோரி பொது மக்கள் இன்று காலை சாலை மறியலில்இறங்கினர்.
செங்குன்றம் அருகே நடந்த இந்த சாலை மறியல் காரணமாக சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில்சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
லாரிகள், பேருந்துகள், கார்கள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் சில கிலோமீட்டர் தொலைவுக்கு நீண்ட நேரம்காத்துக் கிடந்தன.
போலீஸாரின் சமரச முயற்சிக்குப் பின்னர் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்துசென்றனர்.
இதே போல புளியந்தோப்பு, மாம்பழச் சாலை, வில்லிவாக்கம் உள்ளிட்ட சில இடங்களிலும் வெள்ள நிவாரணம்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதில் சில இடங்களில் போலீஸார் லேசான தடியடி நடத்திகூட்டத்தைக் கலைத்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications