15ம் தேதி சபரிமலை நடை திறப்பு
சபரிமலை:
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை காலத்தில் நடைபெறும் ஆராட்டு விழா ஏப்ரல் மாதத்திற்குமாற்றப்பட்டுள்ளது.
வரும் கார்த்திகை 1ம் தேதி முதல் 2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான சபரிமலை நடை திறக்கும் நாட்களைதிருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.மண்டல பூஜை காலத்தில் நடைபெறும் ஆராட்டு திருவிழா ஏப்ரல் மாதத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
2005ம் ஆண்டுக்கான மண்டல கால பூஜைக்காக சபரிமலை நடை வரும் 15ம் தேதி திறக்கப்படுகிறது. 16ம் தேதி காலை மண்டலகாலம் தொடங்குகிறது.
அன்று காலை 4.30 மணி முதல் நெய்யபிஷேகம் தொடங்கும். அதன் பிறகு டிசம்பர் 26 இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும்.
இதுவரை மண்டல பூஜை முடிந்து அடுத்து மகர விளக்குக்காக ஜனவரி 1ம் தேதி நடை திறக்கப்பட்டு வந்தது. இதிலும் சிறியமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதிக்கு பதிலாக டிசம்பர் 30 மாலை 5.30 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.
ஜனவரி 14 அன்று மகரவிளக்கு. தொடர்ந்து ஜனவரி 20 காலை 9 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.
பிப்ரவரி: நடைதிறப்பு 12.2.2006 - நடை அடைப்பு 17.2.2006 மாசி மாத பூஜை.
மார்ச்: நடைதிறப்பு 14.3.2006 - நடை அடைப்பு 19.3.2006, பங்குனி மாத பூஜை.
ஏப்ரல் : நடைதிறப்பு 2.4.2006 - நடை அடைப்பு 18.4.2005. இந்த நாட்களில் 10 நாட்கள் ஆராட்டு திருவிழா, பங்குனிஉத்திரம், சித்திரை விஷூ தரிசனம் மற்றும் சித்திரை மாத பூஜை ஆகியவை நடக்கிறது.
திருவிழா கொடியேற்று 2.4.2006, பம்பையில் ஆராட்டு மற்றும் பங்குனி உத்திரம் 11.4.2006, விஷூ தரிசனம் 14.4.2006.
மே: நடை திறப்பு 14.5.2006 - நடை அடைப்பு 19.5.2006 வைகாசி மாத பூஜை.
ஜூன் : இந்த மாதத்தில் இரண்டு முறை நடை திறக்கப்படுகிறது. பிரதிஷ்டை தின பூஜைக்கு நடைதிறப்பு 5.6.2006 - நடைஅடைப்பு 6.6.2006. ஆனி மாத பூஜைக்காக நடை திறப்பு 14.6.2006 - நடை அடைப்பு 19.6.2006.
ஜூலை : நடைதிறப்பு 16.7.2006 - நடை அடைப்பு 21.7.2006, ஆடி மாத பூஜை.
ஆகஸ்ட் : நடைதிறப்பு 16.8.2006 - நடை அடைப்பு 21.8.2006, ஆவணி மாத பூஜை.
செப்டம்பர்: இந்த மாதத்தில் இரண்டு முறை நடை திறக்கப்படுகிறது. திருவோண பூஜைக்காக நடைதிறப்பு 3.9.2006 - நடைஅடைப்பு 7.9.2006. புரட்டாசி மாத பூஜைக்காக நடைதிறப்பு 16.9.2006 - 21.9.2006.
அக்டோபர்: நடைதிறப்பு 17.10.2006 - நடை அடைப்பு 22.10.2006.
இந்த நாட்களில் ஐப்பசி மாத பூஜையுடன் 22ம் தேதி ஸ்ரீ சித்திரை ஆட்டத்திருநாள் பூஜையும் நடைபெறுகிறது.
நடைதிறக்கும் எல்லா நாட்களிலும் மாலை 5.30 மணிக்கு திறக்கும். அடைக்கும் நாட்களில் இரவு 10 மணிக்கு அடைக்கும்.
வரும் மகரவிளக்கு காலத்தில் காலையில் நடைதிறக்கும் நேரத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 31 முதல் ஜனவரி14 வரை எல்லா நாட்களிலும் அதிகாலையில் நடைதிறப்பது காலை நான்கு மணிக்கு பதிலாக மூன்றுக்கு திறக்கும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சன்னிதானம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications