குழந்தைசாமி தலைமையில் தமிழ் மேம்பாட்டு குழு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வி.சி. குழந்தைசாமி தலைமையில் தமிழ் மேம்பாட்டு ஆலோசனை குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
தமிழ் மொழி வளர்ச்சிக்கான ஆலோசனை வழங்கும் இந்த குழுவில் பேராசிரியர் நன்னன், டாக்டர் சிலம்பொலிசெல்லப்பன், கவிக்கோ அப்துல் ரகுமான், டாக்டர் மணவை முஸ்தபா, டாக்டர் அவ்வை நடராஜன், பேராசிரியர்சாலமன் பாப்பையா, நிர்மலா சுரேஷ், ஈரோடு தமிழன்பன், வா.மு.சேதுராமன், பேராசிரியர் பாலசுப்பிரமணியன்ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகம் இதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளது. இக்குழுஅவ்வப்போதோ அல்லது ஆண்டுக்கு ஒரு முறையோ கூடும். தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் 3ஆண்டுகள்.
தமிழ் மொழி மேம்பாடு, தமிழ் இலக்கியம், தத்துவம், வரலாற்று ரீதியான மொழியியல், கலை, கட்டடக்கலைபோன்ற தமிழ்க் கலாச்சார மேம்பாட்டுக்கான ஆலோசனைகளை மத்திய அரசுக்கு இக்குழுவினர் தெரிவிப்பர்.












Click it and Unblock the Notifications