நட்வருக்கு எதிராக சென்னையில் பாஜக போராட்டம்
சென்னை:
மத்திய அமைச்சரவையில் இருந்து நட்வர் சிங்கை பதவி நீக்கம் செய்யக் கோரி சென்னையில் வெங்கையா நாயுடு தலைமையில்பாஜகவினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
ஈராக்கின் எண்ணெய்க்கு உணவு திட்டத்தில் ஊழல் செய்ததாக கூறப்பட்ட புகாரையடுத்து நட்வரை பதவி நீக்கம் செய்ய பாஜக கோரிவருகிறது. நாடு முழுவதும் போராட்டமும் நடத்தி வருகிறது.இந் நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பாஜத தேசியத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மாஜி அமைச்சர்திருநாவுக்கரசர், தமிழக பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்ற தர்ணா போராட்டம் நடந்தது.
இப் போராட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நாயுடு,
இந்த விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள பாதக் கமிஷன் விசாரணை வெறும் கண்துடைப்பு தான். ஈராக் எண்ணெய் திட்டத்தில்நட்வர் சிங் மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியும் பலனடைந்துள்ளது.
இது ஒரு கிரிமினல் வழக்கு. இதை கமிஷன் விசாரிக்க முடியாது. சிபிஐ போன்ற அமைப்பு தான் இதை முழுமையாக விசாரிக்க முடியும்என்றார்.
முன்னதாக தர்ணாவின்போது பேசிய நாயுடு, காங்கிரஸ் கட்சியும், சோனியா காந்தியும் இந்த முறைகேட்டால் லாபம் அடைந்துள்ளதால்நட்வர் சிங்கைக் காப்பாற்ற பிரதமர் முனைகிறார். மத்திய அமைச்சரவையில் ஏகப்பட்ட ஊழல் பேர்வழிகள் இருந்தாலும் அவர்கள் மீதுபிரதமரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications