பிரதமர் பேசியபோது மாணவர்கள் கோஷம்: பரபரப்பு
டெல்லி:
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய பிரதமருக்கு எதிராக மாணவர்கள் கருப்புக் கொடி காட்டியபடி கோஷமிட்டுகலாட்டா செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜே.என்.யூ. என்றழைக்கப்படும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் நாட்டின் முன்னணி இடதுசாரித் தலைவர்களை உருவாக்கிய கல்விமையமாகும்.நேருவின் பிறந்த தினத்தையொட்டி இங்கு நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றினார்.
அவர் பேச எழுந்ததும் பிரச்சனை வெடித்தது. காங்கிரஸ் கூட்டணி அரசின் அமெரிக்க ஆதரவுப் போக்கைக் கண்டித்தும், மன்மோகன்சிங்கின் பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்தும், இரான் விவகாரத்தில் இந்தியாவின் நிலையை எதிர்த்தும் மாணவர்கள்கோஷமிட்டனர்.
அவர்களை அமைதியாக இருக்குமாறு ஆசிரியர்களும் நிர்வாகிகளும் கோரினர். ஆனால், மாணவர்களின் எதிர் கோஷம் அதிகமானதேதவிர குறையவில்லை.
இதையடுத்து பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பிரதமர் கடும் அமளிக்கு இடையே பேச ஆரம்பித்தார். அப்போது பிரதமருக்கு எதிராகமாணவர்கள் கருப்புக் கொடிகளைக் காட்டினர்.
மன்மோகன் சிங்கே.. திரும்பிப் போ என்ற மாணவர்களின் கடும் கோஷங்களுக்கு மத்தியிலும் பிரதமர் 10 நிமிடங்கள் உரையாற்றினார்.ஆனால், பேசி முடிந்தவுடன் அங்கிருந்து பிரதமர் கிளம்பிச் சென்றுவிட்டார்.
பிரதமருக்கு ஆதரவாக காஙங்கிரஸ் ஆதரவு மாணவர்கள் கோஷமிட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது. போலீசார்தலையிட்டு இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தினர்.
பிரதமர் பேசிக் கொண்டிருந்தபோது இரு தரப்பு மாணவர்களும் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு களேபரம் செய்தனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications