கட்டெறும்பு கடித்து இறந்த நோயாளி

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா:

கொல்கத்தா அரசு மருத்துவமனையில் கட்டெறும்பு கடித்து ஒரு நோயாளி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவை சேர்ந்த 55 வயதான பெண் கெளரி சக்கரபர்த்தி என்பவர் சம்புநாத் பண்டிட் மருத்துவமனையில் மிகுந்த கண்வலி காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரை மருத்துவர்கள் பரிசோதித்து அறுவை சிகிச்சை செய்தனர். அதன் பிறகு அவரை படுக்கையில் அனுமதித்த பிறகு அங்குபணியில் இருந்த நர்ஸ் அவரை கவனிக்கவில்லை.

இந்த நிலையில் அவரது மகன் செளமன் தனது தாயை பார்க்க வந்த போது அவரது தாயார் இறந்து கிடந்தார். மேலும் அவரதுகண்களில் கட்டெறும்பு மொய்த்தக் கொண்டிருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதனால் அவர் எனது தாயாரின் மரணத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது அதனால் பிரேத பரிசோதனை செய்த பிறகே நாங்கள்அவரின் உடலை எடுத்து செல்வோம். இந்த சம்பவம் குறித் து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று போராடினார்.

இதை தொடர்ந்து இறந்த பெண்மணியின் உறவினர்கள் பவானிபூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்தனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து அறிந்த திரிணாமல் காங்கிரசார் மருத்துவமனை வாசலில் நின்று மருத்துவமனையின்அலட்சியம் குறித்து கோஷம் எழுப்பியவாறு போராட்டம் நடத்தினர்.

மேலும் மருத்துவமனை அதிகாரி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதை தொடர்ந்து மாநில சுகாதரத்துறை அமைச்சர் சுர்ஜியா காந்த மிஸ்ரா இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை தமக்கு அறிக்கைசம்ர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+