தூக்கி அடிக்கப்பட்ட கற்பூர சுந்தரபாண்டியன்
சென்னை:
தமிழக போக்குவரத்துத்துறைச் செயலாளராக இருந்த கற்பூரசுந்தரபாண்டியன் திடீரென தூக்கியடிக்கப்பட்டுள்ளார். அவரைதோட்டக்கலைத்துறையின் சிறப்பு ஆணையர் என்ற டப்பா பதவியில் நியமித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
மன்னாக்குடி சக்தியின் ஆதரவோடு ஆளும் தரப்புக்கு மிக நெருக்கமாக இருந்து வந்தவர் கற்பூரசுந்தரபாண்டியன்.இவரது திடீர் மாற்றத்துக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் நிதியமைச்சர் பொன்னைனும் தான் காரணம்என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.
விரைவில் போக்குவரத்துத்துறைக்கு 2,000 டிரைவர்கள், 720 கண்டக்டர்களை நியமிக்க இருக்கிறார்களாம். தேர்தல் வருவதால்அதிமுகவினர் சம்பாதிப்பதற்கு வசதியாக அவர்கள் சிபாரிசு செய்யும் ஆட்களுக்கே இந்தப் பதவிகள் கிடைக்குமாம்.
ஆனால், இந்த விஷயத்தில் கற்பூரம் முழு அளவில் ஒத்துழைப்பு தரவில்லையாம்.
இந்த நியமனத்தில் தானும் லாபம் அடிக்கப் பார்த்த கற்பூரம், எல்லா போஸ்டிங்குகளுக்கும் ஆளும் கட்சியினர்சொல்வபர்களையே எப்படி நியமிப்பது என்று போக்குவரத்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பினாராம்.
இதையடுத்து பொன்னையன் மூலமாக மேலிடத்துக்கு விஷயத்தைக் கொண்டு போனாராம் அமைச்சர் நத்தம்.
இதைத் தொடர்ந்து தான் அவருக்கு தோட்டக்கலையில் வேலை தந்துவிட்டார்கள் என்கிறார்கள் கோட்டையில் தகவல்அறிந்தவர்கள்.
போக்குவரத்துத்துறைச் செயலாளர் என்ற பதவியில் மிக அதிகாரமாக இருந்தவாறு, பல வகைகளிலும் எக்ஸ்ட்ரா லாபம் பார்த்துவந்த கற்பூரம் தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப் பயிர்கள் பிரிவு சிறப்பு ஆணையர் என்ற பதவியில் நொந்து போய்அமர்ந்திருக்கிறாராம்.
இப்போது பொன்னையனின் சிபாரிசின் அடிப்படையில் சண்முகம் ஐஏஎஸ் போக்குவரத்துத்துறைச் செயலாளராகிவிட்டார்.
அதே போல முதல்வரின் இணைச் செயலாளராக இருந்த ராமலிங்கம் ஐஏஎஸ்சுக்கு பதவி உயர் தரப்பட்டு இணைச் செயலாளர்ஆக்கப்பட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications