மத்திய அமைச்சரவை மாற்றம்: ரெட்டிக்கு ஆப்பு- முன்ஷியிடம் ஒளிபரப்புத்துறை
டெல்லி:
மத்திய அமைச்சரவையில் பிரதமர் மன்மோகன் சிங் இன்று மாற்றம் செய்தார்.
அதன்படி செய்தி, ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டியிடம் இருந்து அந்தத் துறை பறிக்கப்பட்டுள்ளது. அவர்முக்கியத்துவம் இல்லாத நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் கலாச்சாரத்துறையை அவரேதொடர்ந்து கவனிப்பார்.ஒளிபரப்புத்துறை அமைச்சராக பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார். இது தவிர நாடாளுமன்றவிவகாரத்துறையையும் அவர் கவனிப்பார். இதுவரை முன்ஷி நீர்வளத்துறை அமைச்சராக இருந்து வந்தார்.
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்த குலாம்நபி ஆசாத் காஷ்மீர் முதல்வரானதால் அந்தப் பொறுப்பு காலியாகஇருந்து வந்தது.
முன்ஷி வசம் இருந்த நீர்வளத்துறை இப்போது கனரகத் தொழில்துறை இணை அமைச்சர் சந்தோஷ் மோகன் தேப்பிடம்தரப்பட்டுள்ளது.
மத்திய திட்டத்துறை இணை அமைச்சராக இருக்கும் ஆஸ்கர் பெர்னாண்டசுக்கு விளையாட்டுத்துறைப் பொறுப்பும், வெளிநாட்டுஇந்தியர்கள் நலத்துறையும் கூடுதலாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த சுனித் தத் மரணமடைந்ததாலும், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நலத்துறைஅமைச்சராக இருந்த ஜெகதீஷ் டைட்லர் சீக்கியர் படுகொலை விவகாரத்தில் ராஜினாமா செய்ததாலும் இந்த இரு துறைகளும்அமைச்சர்கள் இல்லாமல் காலியாக இருந்தன.
வெளியுறவுத்துறையையும் நிலக்கரித்துறையையும் பிரதமர் மன்மோகன் சிங்கே தொடர்ந்து கவனிப்பார் என்றும்அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈராக் எண்ணெய் விற்பனை தொடர்பான ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நட்வர் சிங் வெளியுறவுத்துறையை ராஜினாமாசெய்தார். அதே போல கொலை வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதால் நிலக்கரித்துறை அமைச்சராக இருந்தஜார்க்கண்ட் முக்தி மோச்சா தலைவர் சிபு சோரன் ராஜினாமா செய்தார் என்பது நினைவுகூறத்க்கது.
இதற்கிடையே மத்திய அமைச்சரவை விரிவாக்கம் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.வரும் 23ம் தேதி கூடும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்த பிறகு அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications