மாநகராட்சி கூட்டம்: திமுக கலந்து கொள்ளும்
சென்னை:
நாளை (திங்கட்கிழமை) நடக்கவிருக்கும் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் திமுக கலந்து கொள்ளும் என்று மன்ற எதிர்க்கட்சிதலைவர் மலையன் கூறியுள்ளார்.நேற்று சென்னையில் நடைபெற்ற மன்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு மன்ற எதிர்க்கட்சி தலைவர் மலையன்கூறியதாவது:
நாளை (திங்கட்கிழமை) நடக்கும் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிக்கட்சிகள் கலந்துகொள்வது என முடிவு செய்துள்ளோம்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 40 சதவீத மக்களுக்கு தான் அரசு வழங்க நிவாரண உதவிகள் கிடைத்துள்ளன. மீதி 60சதவீதம் பேருக்கு கிடைக்கவில்லை.
இதுபற்றி மன்ற கூட்டத்தில் விவாதிக்க வலியுறுத்துவோம் என்று கூறினார்.
நாளை நடக்கவுள்ள கூட்டத்தில் விஜயராமகிருஷ்ணா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இவர் வரி விதிப்பு நிலைக்குழுதலைவராக உள்ளார்.
தலைவர் தேர்வை தொடர்ந்து கராத்தே தியாகராஜனுக்கு எதிராக அதிமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இத் தீர்மானம் மூலம் அவர் துணைமேயர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்.
பின்னர் துணைமேயர் பொறுப்புகளை விஜயராமகிருஷ்ணா ஏற்பார். இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்கும் என்று தெரிகிறது.
மாநகராட்சி வரலாற்றிலேயே முதன்முறையாக மேயர், துணைமேயர் இல்லாமல் மன்ற கூட்டம் நடைபெறவுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications