பாம்பன் அருகே கரையை கடக்கும் புயல்: தமிழகம் முழுவதும் கனமழை- கிரிக்கெட் ரத்து?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வங்கக் கடலில் ராமேஸ்வரத்துக்கு 400 கி.மீ. தொலைவில் கிழக்கு-தென் கிழக்கே மையம் கொண்டிருக்கும் புயல் சின்னம்தமிழகக் கடற்கரை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்யத்தொடங்கியுள்ளது.

இந்தப் புயல் இன்று இரவு அல்லது நாளை காலை பாம்பன் அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று முதல் தமிழகம் முழுவதும் மேக மூட்டமாகக் காணப்பட்ட நிலையில் இன்று அதிகாலை முதல் கன மழை பெய்யத்தொடங்கிவிட்டது. சென்னையில் பலத்த மழை பெய்து சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தென் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்துவருகிறது.

இரு வாரங்களுக்கு முன் வட தமிழகத்தை மழை போட்டுப் பார்த்தது. இதனால் ஏற்பட்ட காவிரி வெள்ளப் பெருக்கு நாகை,தஞ்சை, திருச்சி, கடலூர் மாவட்டங்களை வெள்ளக் காடாக்கியது. இந் நிலையில் இப்போது ராமேஸ்வரத்தை மையமாக வைத்துதமிழக்ததைத் தாக்குகிறது புயல்.

இது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் ரமணன் கூறுகையில்,

வங்கக் கடலில் உருவாகியுள்ள இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறி மேற்கு மற்றும் வட மேற்கு திசையை நோக்கிநகர்ந்து வருகிறது. இதனால் தென் மாவட்டங்களிலும் வடக்குக் கடலோர மாவட்டங்களிலும் பலத்த காற்றுடன் கன மழைபெய்யும்.

கடலோரப் பகுதிகளில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும். தென் தமிழகத்தின் உள் பகுதிகளிலும் மணிக்கு 55 கிமீ.வேகத்தில் புயல் காற்று வீசும். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றார்.

நேற்றிரவு பாம்பனில் இருந்து 550 கிமீ தூரத்தில் மையம் கொண்டிருந்த புயல் இன்று பிற்பகல் 2 மணியளவில் 400 கி.மீ.தொலைவுக்கு நெருங்கிவிட்டது.

கிரிக்கெட் போட்டிக்கு பாதிப்பு?:

சென்னையில் நேற்றிரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

இதனால் சென்னையில் நாளை நடைபெறவுள்ள இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது கிரிக்கெட்போட்டியை மழை கெடுக்குமோ என்ற அச்சம் பரவியுள்ளது.

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை இன்று காலை மழையில் சுற்றிப் பார்த்த தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் மிக்கிஆர்தர் கூறுகையில், போட்டியை மழை கெடுக்க வாய்ப்புள்ளது என்றார்.

டிக்கெட்டுகளை விற்றுவிட்டு கவலையுடன் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் சீனிவாசன், இன்று இரவு மழைநின்றாலும் போட்டியை நடத்திவிட முடியும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+