ரயில் ஸ்னேகம்- மயக்க பிரியாணி- 15 பவுன் நகை அபேஸ்: மர்ம பெண்ணுக்கு வலைவீச்சு
சென்னை:
டாக்டரின் மனைவிக்கு மயக்க பிரியாணி கொடுத்து அவரிடம் இருந்து 15 பவுன் நகையைக் கொள்ளையடித்த பெண்ணைபோலீசார் தேடி வருகின்றனர்.
சென்னே அயனாவரத்தைச் சேர்ந்த டாக்டர் கோபிநாத்தின் மனைவி கீதா (59). இவர்களது உறவினர் மீரா பாய். இவர் சிலதினங்களுக்கு முன் மதுரையில் இருந்து ரயிலில் சென்னை வந்தார். அப்போது அதில் பயணம் செய்த ஜெனீபர் என்ற பெண்மீராபாய்க்கு அறிமுகமானார்.இதையடுத்து சென்னையில் தான் தங்கப் போகும் கோபிநாத்தின் வீட்டு தொலைபேசி எண்ணை ஜெனீபரிடம் தந்தார் மீரா பாய்.
சென்னை வந்து சேர்ந்த மீரா பாய்க்கு இரு நாட்களுக்குப் பின் ஜெனீபரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மீராபாய்க்கு வங்கிக் கடன் கிடைக்க உதவி செய்வதாக ஜெனீபர் கூறினார்.
இதையடுத்து ஜெனீபரைப் பார்க்க மீரா பாயும் கீதாவும் சென்றனர். அவர்களை மயிலாப்பூரில் வைத்து சந்தித்த ஜெனீபர்,விருகம்பாக்கம் அருகே ஒரு முகவரியைக் கொடுத்து மீரா பாயை அனுப்பி வைத்தார் ஜெனீபர். அங்கு போய் லோன் தொடர்பாகபேசுமாறு கூறினார்.
கீதாவை அவருடன் போக விடாமல் தடுத்த ஜெனீபர் அவரை எம்ஜிஆர் சமாதி அருகே அவைத்துச் சென்றார். அங்கு கீதாவுக்குபிரியாணி வாங்கி வந்து சாப்பிடச் சொன்னார். அதை உண்ட கீதா மயங்கினார். இதையடுத்து அவர் அணிந்திருந்த 15 பவுன்நகைகளைத் திருடிக் கொண்டு ஜெனீபர் என்ற அந்தப் பெண் மாயமாகிவிட்டார்.
அவரது உண்மையான பெயர் ஜெனீபராக இருக்க வாய்ப்பில்லை என போலீசார் கருதுகின்றனர். அந்தப் பெண்ணைப் பிடிக்கதீவிர முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணிகளே உஷார்...
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications