துபாயில் தவிக்கும் 39 தமிழர்கள்: மீட்க ஜெ. கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஐக்கிய அரபு நாட்டில் தவிக்கும் தமிழ்த் தொழிலாளர்களை மீட்க கோரி முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்குகடிதம் எழுதியுள்ளார்.

அவர் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஐக்கிய அரபு குடியரசில் உள்ள ஹாஸ்பிட்டாலிட்டி கேட்டரிங் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 39 தமிழ் இளைஞர்களின் பரிதாபநிலை பற்றி உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

2003ம் ஆண்டு முதல் அந்த நிறுவனத்தில் 39 தமிழர்கள் மிக குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்து வந்தனர். இதற்கு முன்பு இந்ததொழிலாளர்கள் அபுதாபியில் உள்ள போர் கேட்டரிங் சர்வீஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

அந்த நிறுவனம் திவால் ஆனதை தொடர்ந்து அவர்கள் அல் அயின் நகரில் உள்ள ஹாஸ்பிட்டாலிட்டி கேட்டரிங் நிறுவனத்துக்குமாற்றப்பட்டார்கள் என்றும் அறிகிறேன். தங்களுக்கு வேலை விசா வழங்கும்படி அந்த தொழிலாளர்கள் நேரிலும் எழுத்துமூலமாகவும் தொடர்ந்து வற்புறுத்தியும் அவர்களுக்கு விசா வழங்கப்படவில்லை.

அவர்களுக்கு உரிய மருத்துவ அட்டையும் வழங்கப்படவில்லை. போதுமான சம்பளம் கொடுக்காமல் மிக குறைந்த சம்பளமேவாங்கியிருக்கிறார்கள்.

பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட அவர்கள் இந்தியா திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தனர், ஆனால் அவர்கள் பாஸ்போர்ட்களைவாங்கி வைத்து கொண்டதால் அவர்கள் நாடு திரும்ப முடியவில்லை.

குறிப்பிட்ட காலத்திற்கு மேல் தங்கியிருந்ததாக அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட அவர்களிடம் பணம்இல்லை. திரும்பி வர டிக்கெட் எடுக்கவும் அவர்களுக்கு வழியில்லை. இந்தியத் தூதரகத்தில் முறையிட்டும் பலனில்லை.

எனவே தாங்கள் ஐக்கிய அரசு குடியரசில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கஉத்தரவிடுங்கள். அதிக நாட்கள் அங்கு தங்கியதற்காக அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபாராத தொகையை ரத்து செய்யவும்உத்தரவிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

அந்த தொழிளார்களுக்கு உரிய சம்பள பாக்கியை வழங்கவும் அவர்களது ஆவணங்களை ஒப்படைக்கவும் அவர்கள் பத்திரமாகஇந்தியா திரும்பவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+