குஷ்பு: டிஜிபிக்கு நோட்டீஸ்
சென்னை:
![]() |
இந்திய வக்கீல் சங்கத்தின் அமைப்பாளர் சூரிய பிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
திருமணத்துக்கு முன் பெண்கள் செக்ஸ் உறவு கொள்வதில் தவறு இல்லை என்றும், கர்ப்பம் அடையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்றும் நடிகை குஷ்பு கூறியிருந்தார். அவருக்கு சுஹாசினியும் ஆதரவு தெரிவித்தார். இந்த இருவரையும் கண்டித்துஅனுமதியின்றி சட்ட விரோதமாக பேரணி, போராட்டம் நடத்தினார்கள்.
இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. போலீஸ் டிஜிபி இதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேட்டூர்நிதிமன்றத்தில் குஷ்பு வந்த போது செருப்புகள் வீசப்பட்டன. இது நீதித்துறையில் தலையிடுவதாக உள்ளது. அரசியல் சட்டத்தில்19(1) ஏ விதியின் படி கருத்து சுதந்திரத்தை பாதிப்பதாக உள்ளது.
எனவே அனுமதியின்றி வன்முறை போராட்டங்கள் நடப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி டிஜிபிக்கு உத்தரவிடவேண்டும்என்று கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் குஷ்புவுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதுகுறித்து டிசம்பர் 2ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி டிஜிபிக்கு உத்தரவிட்டனர்.













Click it and Unblock the Notifications